திருப்புகழ் 704 சாலநெடு நாள் (கோடைநகர்)

Thiruppugal 704 Salanedunal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த – தனதான

சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து – புவிமீதே

சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து – விளையாடிப்

பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து – பொருள்தேடிப்

பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு – தருவாயே

ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த – முருகோனே

ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் – மருகோனே

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட – குமரேசா

கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த – தனதான

சாலநெடு நாள்மடந்தை காயமதிலே யலைந்து
சாம் அளவதாக வந்து – புவிமீதே

சாதகமுமான பின்பு சீறியழுதேகி டந்து
தாரணியிலே தவழ்ந்து – விளையாடி

பாலனெனவே மொழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீதணைந்து – பொருள்தேடிப்

பார்மிசையிலேயுழன்று பாழ்நரகெய்தாமல் ஒன்று(ம்)
பாதமலர் சேர அன்பு – தருவாயே

ஆலம் அமுதாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த – முருகோனே

ஆனைமடு வாயில் அன்று மூலமென ஓலமென்ற
ஆதிமுதல் நார ணன்றன் – மருகோனே

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமுது ஊற லுண்ட – குமரேசா

கூடிவரு சூர் அடங்க மாள வடிவேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த – பெருமாளே.

English

sAlanedu nALma danthai kAyamathi lEya lainthu
cAmaLava thAka vanthu – puvimeethE

sAthakamu mAna pinpu seeRiyazhu thEki danthu
thAraNiyi lEtha vazhnthu – viLaiyAdip

pAlanena vEmo zhinthu pAkumozhi mAthar thangaL
pArathana meetha Nainthu – poruLthEdip

pArmisaiyi lEyu zhanRu pAzhnarakey thAma lonRu
pAthamalar cEra anpu – tharuvAyE

Alamamu thAka vuNda ARucadai nAthar thingaL
Adaravu pUNar thantha – murukOnE

Anaimadu vAyi lanRu mUlamena vOla menRa
Athimuthal nAra NanRan – marukOnE

kOlamalar vAvi yengu mEvupunam vAzhma danthai
kOvaiyamu thURa luNda – kumarEsA

kUdivaru sUra danga mALavadi vEleRintha
kOdainagar vAzha vantha – perumALE.

English Easy Version

sAlanedu nAL madanthai kAyamathilE yalainthu
sAmaLava thAka vanthu – puvimeethE

cAthakamu mAna pinpu seeRiyazhu thEki danthu
thAraNiyi lEtha vazhnthu – viLaiyAdi

pAlanena vEmozhinthu pAkumozhi mAthar thangaL
pArathana meetha Nainthu – poruLthEdip

pArmisaiyi lEyu zhanRu pAzhnarakey thAmal
onRu pAthamalar cEra anpu – tharuvAyE

Alamamu thAka vuNda ARucadai nAthar thingaL
Adaravu pUNar thantha – murukOnE

Anaimadu vAyi lanRu mUlamena vOla menRa
Athimuthal nAra NanRan – marukOnE

kOlamalar vAvi yengu mEvupunam vAzhma danthai
kOvaiyamu thURa luNda – kumarEsA

kUdivaru sUra danga mALavadi vEleRintha
kOdainagar vAzha vantha – perumALE.