திருப்புகழ் 705 ஏறு ஆனாலே (கோடைநகர்)

Thiruppugal 705 Eruanale

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தானா தானா தானா
தானா தானா – தனதானா

ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக் – கணையாலே

ஏயா வேயா மாயா வேயா
லாமே ழோசைத் – தொளையாலே

மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக் – கழியாதே

வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத் – தொடைதாராய்

சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக் – குமரேசா

தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் – பதியோனே

வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப் – பொருதோனே

வேதா போதா வேலா பாலா
வீரா வீரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தானா தானா தானா
தானா தானா – தனதானா

ஏறு ஆனாலே நீறு ஆய் மாயா
வேளே(வு) வாசக் – கணையாலே

ஏயாய் ஏயாய் மாயா வேயால்
ஆம் ஏழு ஓசைத் – தொளையாலே

மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய்
வாடா மானைக் – கழியாதே

வாராய் பாராய் சேராயானால்
வாடா நீபத் – தொடை தாராய்

சீறா வீறா ஈரேழ் பார் சூழ்
சீரார் தோகைக் – குமரேசா

தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் – பதியோனே

வேறாய் மாறாய் ஆறாம் மா சூர்
வேர் போய் வீழப் – பொருதோனே

வேதா போதா வேலா பாலா
வீரா வீரப் – பெருமாளே

English

ERA nAlE neeRAy mAyA
vELE vAsak – kaNaiyAlE

EyA vEyA mAyA vEyA
lAmE zhOsaith – thoLaiyAlE

mARA yURA yeeRAy mAlAy
vAdA mAnaik – kazhiyAthE

vArAy pArAy sErA yAnAl
vAdA neepath – thodaithArAy

seeRA veeRA eerEzh pArsUzh
seerAr thOkaik – kumarEsA

thEvA sAvA mUvA nAthA
theerA kOdaip – pathiyOnE

vERAy mARA yARA mAcUr
vErpOy veezhap – poruthOnE

vEthA pOthA vElA bAlA
veerA veerap – perumALE.

English Easy Version

ERu AnAlE neeRAy mAyA
vELE(vu) vAsak – kaNaiyAlE

EyAy EyAy mAyA vEyAl
Am Ezhu Osaith – thoLaiyAlE

mARAy URAy eeRAy mAlAy
vAdA mAnaik – kazhiyAthE

vArAy pArAy sErAyAnAl
vAdA neepath – thodai thArAy

seeRA veeRA eerEzh pAr sUzh
seerAr thOkaik – kumarEsA

thEvA sAvA mUvA nAthA
theerA kOdaip – pathiyOnE

vERAy mARAy ARAm mA cUr
vEr pOy veezhap – poruthOnE

vEthA pOthA vElA bAlA
veerA veerap – perumALE.