Thiruppugal 708 Tholthappamal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் – தனதான
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற் – றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச் – சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் – டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் – தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
தாரச் சீறிப் – பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் – தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் – திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் – தனதான
தோள் தப்பாமல் தோய்தப் பாணி
சூழ்(ந்)து உற்றார் துற்று – அழுவாரும்
தூரப் போக கோரப் பாரச்
சூலப் பாசச் – சமன் ஆரும்
பாடைக் கூடத் தீயில் தேறி
பாழ் பட்டே பட்டு – அழியாதே
பாசத்தேனைத் தேசு உற்றார் பொன்
பாதத்தே வைத்து – அருள்வாயே
ஆடல் சூர் கெட்டு ஓடத் தோயத்து
ஆரச் சீறிப் – பொரும் வேலா
ஆனைச் சேனைக் கானில் தேனுக்கு
ஆரம் தாரைத் – தரும் வீரா
கூடற்பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் – திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் – பெருமாளே
English
thOdap pAmat ROythap pANic
sUzhthut RArthut – RazhuvArum
thUrap pOkak kOrap pArac
cUlap pAsac – camanArum
pAdaik kUdath theeyit RERip
pAzhpat tEpat -tazhiyAthE
pAsath thEnaith thEsut RArpoR
pAthath thEvaith – tharuLvAyE
AdaR cUrket tOdath thOyath
thArac ceeRip – porumvElA
Anaic cEnaik kAnit REnuk
kArath thAraith – tharumveerA
kUdaR pAdik kOvaip pAvaik
kUdap pAdith – thirivOnE
kOlac cAlic cOlaic ceelak
kOdaith thEvap – perumALE.
English Easy Version
thOL thappAmal thOythap pANi
sUzh(n)thu utRAr thutRu – azhuvArum
thUrap pOka kOrap pArac
cUlap pAsac – caman Arum
pAdaik kUdath theeyil thERi
pAzh pattE pattu – azhiyAthE
pAsaththEnaith thEsu utRAr pon
pAthaththE vaiththu – aruLvAyE
Adal cUr kettu Odath thOyaththu
Arac ceeRip – porum vElA
Anaic cEnaik kAnil thEnukku
Aram thAraith – tharum veerA
kUdaRpAdik kOvaip pAvaik
kUdap pAdith – thirivOnE
kOlac cAlic cOlaic ceelak
kOdaith thEvap – perumALE.