திருப்புகழ் 709 வாசித்த நூல் (கோடைநகர்)

Thiruppugal 709 Vasiththanul

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த – தனதான

வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று – நிலையாக

மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று – மடைமாறி

யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு – முயிர்போக

யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று – மொழியாதோ

வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த – கதிர்வேலா

வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று – விழுவோனே

கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த – சிறியோனே

கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த – தனதான

வாசித்த நூல் மதங்கள் பேசிக் கொடாத விந்து
வாய்மை ப்ரகாசம் என்று – நிலையாக

மாசிக் கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற
வாயுப் பிராணன் ஒன்று – மடைமாறி

யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து
ரோமத் துவாரம் எங்கும் – உயிர் போக

யோகச் சமாதி கொண்டு மோகப் பசாசு மண்டு
லோகத்தில் மாய்வது என்றும் – ஒழியாதோ

வீசு அப் பயோதி துஞ்ச வேதக் குலாலன் அஞ்ச
மேலிட்ட சூர் தடிந்த – கதிர்வேலா

வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி
வேடிச்சி காலில் அன்று – விழுவோனே

கூசிப் புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த
கூளப் புராரி தந்த – சிறியோனே

கோழிப் பதாகை கொண்ட கோலக் குமார கண்ட
கோடைக்குள் வாழ வந்த – பெருமாளே.

English

vAsiththa nUlma thangaL pEsikko dAtha vinthu
vAymaipra kAsa menRu – nilaiyAka

mAsikka pAla manRil nAsikku LOdu kinRa
vAyuppi rANa nonRu – madaimARi

yOsiththa yAru dampai nEsiththu RAtha lainthu
rOmaththu vAra mengu – muyirpOka

yOkaccha mAthi koNdu mOkappa sAsu maNdu
lOkaththil mAyva thenRu – mozhiyAthO

veesappa yOthi thunja vEthakku lAla nanja
mElitta cUrtha dintha – kathirvElA

veerapra thApa panja pANaththi nAlma yangi
vEdicchi kAli lanRu – vizhuvOnE

kUsippu kAvo thunga mAmatRi kAtha rintha
kULappu rAri thantha – siRiyOnE

kOzhippa thAkai koNda kOlakku mAra kaNda
kOdaikkuL vAzha vantha – perumALE.

English Easy Version

vAsiththa nUl mathangaL pEsik kodAtha vinthu
vAymai prakAsam enRu – nilaiyAka

mAsik kapAla manRil nAsikkuL OdukinRa
vAyup pirANan onRu – madaimARi

yOsiththu ayar udampai nEsiththu uRAthu alainthu
rOmath thuvAram engum – uyir pOka

yOkac chamAthi koNdu mOkap pasAsu maNdu
lOkaththil mAyvathu enRum – ozhiyAthO

veesu ap payOthi thunja vEthak kulAlan anja
mElitta cUr thadintha – kathirvElA

veera prathApa panja pANaththinAl mayangi
vEdicchi kAlil anRu – vizhuvOnE

kUsip pukA othunga mAman thikAthu arintha
kULap purAri thantha – siRiyOnE

kOzhip pathAkai koNda kOlak kumAra kaNda
kOdaikkuL vAzha vantha – perumALE.