திருப்புகழ் 710 அனுத்தே னேர்மொழி (திருப்போரூர்)

Thiruppugal 710 Anuththenermozhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன – தனதான

அனுத்தே னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
லடுத்தே தூதுகள் நூறா றானதும் – விடுவார்கள்

அழைத்தே வீடினி லேதா னேகுவர்
நகைத்தே மோடிக ளாவார் காதலொ
டடுத்தே மாமுலை மீதே மார்புற – அணைவார்பின்

குனித்தே பாகிலை யீவார் பாதியில்
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
குடிப்பார் தேனென நானா லீலைகள் – புரிவார்கள்

குறித்தே மாமய லாலே நீள்பொருள்
பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக
குணத்தார் மாதர்கள் மேலா சாவிட – அருள்வாயே

வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் – விறல்வீரா

மலர்த்தே னோடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர் – மருகோனே

சினத்தே சூரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
திருத்தோ ளாஇரு பாதா தாமரை – முருகோனே

திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
திருப்போ ரூருறை தேவா தேவர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன – தனதான

அனுத் தேன் நேர் மொழியாலே மா மயல்
உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில்
அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும் – விடுவார்கள்

அழைத்தே வீடினிலே தான் ஏகுவர்
நகைத்தே மோடிகளாவார் காதலொடு
அடுத்தே மா முலை மீதே மார்பு உற – அணைவார் பின்

குனித்தே பாகு இலை ஈவார் பாதியில்
கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது
குடிப்பார் தேன் என நானா லீலைகள் – புரிவார்கள்

குறித்தே மா மயலாலே நீள் பொருள்
பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக
குணத்தார் மாதர்கள் மேல் ஆசா விட – அருள்வாயே

வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை
எடுத்தே தான் வரவே தான் யாவரும்
வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் – விறல் வீரா

மலர்த் தேன் ஓடையில் ஓர் மா வானதை
பிடித்தே நீள் கர வாதாட ஆழியை
மனத்தால் ஏவிய மா மால் ஆனவர் – மருகோனே

சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும்
எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி
திருத் தோளா இரு பாதா தாமரை – முருகோனே

திருத் தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள்
அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள
திருப்போரூர் உறை தேவா தேவர்கள் – பெருமாளே

English

anuththE nErmozhi yAlE mAmaya
ludaiththAr pOlavu mOrnA LAnathi
laduththE thUthukaL nURA RAnathum – viduvArkaL

azhaiththE veedini lEthA nEkuvar
nakaiththE mOdika LAvAr kAthalo
daduththE mAmulai meethE mArpuRa – aNaivArpin

kuniththE pAkilai yeevAr pAthiyil
kadippAr vAyithazh vAynee rAnathu
kudippAr thEnena nAnA leelaikaL – purivArkaL

kuRiththE mAmaya lAlE neeLporuL
paRippA rAsukaL cUzhmA pAthaka
kuNaththAr mAtharkaL mElA sAvida – aruLvAyE

vanaththE vEduvar mAthA mOrminai
yeduththE thAnvara vEthAn yAvarum
vaLaiththE cUzhavu mOrvA LAlvelum – viRalveerA

malarththE nOdaiyi lOrmA vAnathai
pidiththE neeLkara vAthA dAzhiyai
manaththA lEviya mAmA lAnavar – marukOnE

sinaththE cUrarkaL pOrAy mALavu
meduththOr vElvidu theerA thAraNi
thiruththO LAiru pAthA thAmarai – murukOnE

thiruththEr cUzhmathi LErAr thUpika
LadukkAr mALikai yEnee LEruLa
thiruppO rUruRai thEvA thEvarkaL – perumALE.

English Easy Version

anuth thEn nEr mozhiyAlE mA mayal
udaiththAr pOlavum Or nAL Anathil
aduththE thUthukaL nURu ARu Anathum – viduvArkaL

azhaiththE veedinilE thAn Ekuvar
nakaiththE mOdikaLAvAr kAthalodu
aduththE mA mulai meethE mArpu uRa – aNaivAr pin

kuniththE pAku ilai eevAr pAthiyil
kadippAr vAy ithazh vAy neerAnathu
kudippAr thEn ena nAnA leelaikaL – purivArkaL

kuRiththE mA mayalAlE neeL poruL
paRippAr AsukaL cUzh mA pAthaka
kuNaththAr mAtharkaL mEl AsA vida – aruLvAyE

vanaththE vEduvar mAthAm Or minai
eduththE thAn varavE thAn yAvarum
vaLaiththE cUzhavum Or vALAl velum – viRal veerA

malarth thEn Odaiyil Or mA vAnathai
pidiththE neeL kara vAthAda Azhiyai
manaththAl Eviya mA mAl Anavar – marukOnE

sinaththE cUrarkaL pOr Ay mALavum
eduththu Or vEl vidu theerA thAr aNi
thiruth thOLA iru pAthA thAmarai – murukOnE

thiruth thEr cUzh mathiL Er Ar thUpikaL
adukkAr mALikaiyE neeL Er uLa
thiruppOrUr uRai thEvA thEvarkaL – perumALE