திருப்புகழ் 711 உருக்கு ஆர் வாளி (திருப்போரூர்)

Thiruppugal 711 Urukkuarvali

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
தனத்தா தான தந்த – தனதான

உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உகப்பார் வால சந்த்ர – னுதனூலாம்

உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட
லுவப்பா மேல்வி ழுந்து – திரிவோர்கள்

அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கே பூணு நெஞ்ச – னதிபாவி

அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி – யருள்வாயே

எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்சூ டாதி நம்பர் – புதல்வோனே

இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு – மணிமார்பா

செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட – முருகோனே

தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
தனத்தா தான தந்த – தனதான

உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள்
உகப்பு ஆர் வால சந்த்ர – நுதல் நூலாம்

உருச் சேர் நீள் மருங்குல் பணைத் தோள் ஓதி கொண்டல்
உவப்பா மேல் விழுந்து – திரிவோர்கள்

அருக்கா மாதர் தங்கள் வரைக்கே ஓடி இன்ப
வலைக்கே பூணு நெஞ்சன் – அதிபாவி

அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த
அவத்தால் ஈனம் இன்றி – அருள்வாயே

எருக்கு ஆர் தாளி தும்பை மருச் சேர் போது
கங்கையினைச் சூடு ஆதி நம்பர் – புதல்வோனே

இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில்
இருப்பாய் யானை தங்கும் – மணி மார்பா

செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற
திறல் சேர் வேல் கை கொண்ட – முருகோனே

தினைக்கு ஓர் காவல் கொண்ட குறத் தேன் மாது பங்க
திருப் போரூர் அமர்ந்த – பெருமாளே

English

urukkAr vALi kaNkaL poruppAr vArtha nangaL
ukappAr vAla chanthra – nuthanUlAm

urucchEr neeNma rungul paNaiththO LOthi koNda
luvappA mElvi zhunthu – thirivOrkaL

arukkA mAthar thangaL varaikkE yOdi yinpa
valaikkE pUNu nenja – nathipAvi

asattAl mUdu kinRa masakkAl mAyu mintha
avaththA leena minRi – yaruLvAyE

erukkAr thALi thumpai marucchEr pOthu gangai
yinaicchU dAthi nampar – puthalvOnE

irukkA lEni nainthu thuthippAr nAvi nenji
liruppA yAnai thangu – maNimArpA

serukkA lEmi kuntha kadaRcUr mALa venRa
thiRaRcEr vElkai koNda – murukOnE

thinaikkOr kAval koNda kuRaththEn mAthu panga
thiruppO rUra marntha – perumALE.

English Easy Version

urukku Ar vALi kaNkaL poruppu Ar vAr thanangaL
ukappu Ar vAla santhra – nuthal nUlAm

uruc chEr neeL marungul paNaith thOL Othi koNdal
uvappA mEl vizhunthu – thirivOrkaL

arukkA mAthar thangaL varaikkE Odi inpa
valaikkE pUNu nenjan – athipAvi

asattAl mUdukinRa masakkAl mAyum intha
avaththAl eenam inRi – aruLvAyE

erukku Ar thALi thumpai maruc chEr pOthu
gangaiyinaic cUdu Athi nampar – puthalvOnE

irukkAlE ninainthu thuthippAr nAvil nenjil
iruppAy yAnai thangum – maNi mArpA

serukkAlE mikuntha kadal cUr mALa venRa
thiRal sEr vEl kai koNda – murukOnE

thinaikku Or kAval koNda kuRath thEn mAthu panga
thirup pOrUr amarntha – perumALE