திருப்புகழ் 712 சீர் உலாவிய (திருப்போரூர்)

Thiruppugal 712 Seerulaviya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானன தானன தான தானன தானன
தான தானன தானன – தனதான

சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி – முகமானார்

தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி – குமிழ்நாசி

தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி – னருளாலே

சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழ வினாமிக – அருள்வாயே

காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
காவல் மாதினொ டாவல்செய் – தணைவோனே

காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர – முருகோனே

போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
பூப சேவக மாமயில் – மிசையோனே

போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தானன தானன தான தானன தானன
தான தானன தானன – தனதான

சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில்
சேய சாயல் கலா மதி – முகம் ஆனார்

தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை
சேல் உலாவிய கூர் விழி – குமிழ் நாசி

தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர்
சார்பிலே திரிவேனை நின் – அருளாலே

சாம வேதியர் வானவர் ஓதி நாண் மலர் தூவிய
தாளில் வீழ வினா மிக – அருள்வாயே

கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை
காவல் மாதினொடு ஆவல் செய்து – அணைவோனே

காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய
காரணா கருணாகர – முருகோனே

போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு
பூப சேவக மா மயில் – மிசையோனே

போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு
போரி மா நகர் மேவிய – பெருமாளே

English

seeru lAviya vOthima mAna mAnadai mAmayil
sEya sAyalka lAmathi – mukamAnAr

thEnu lAviya mAmozhi mEru nEriLa mAmulai
sElu lAviya kUrvizhi – kumizhnAsi

thAru lAviya neeLkuzhal vEya LAviya thOLiyar
sArpi lEthiri vEnaini – naruLAlE

sAma vEthiyar vAnava rOthi nANmalar thUviya
thALil veezha vinAmika – aruLvAyE

kAru lAviya neeLpuna vEdar mAlvarai meethuRai
kAval mAthino dAvalsey – thaNaivOnE

kANa Akama vEthapu rANa nUlpala vOthiya
kAra NAkaru NAkara – murukOnE

pOru lAviya cUranai vAri sERezha vElvidu
bUpa sEvaka mAmayil – misaiyOnE

pOthan mAdhavan mAthumai pAthi yAthiyu mEthozhu
pOri mAnakar mEviya – perumALE.

English Easy Version

seer ulAviya Othimam Ana mA nadai mA mayil
sEya sAyal kalA mathi – mukam AnAr

thEn ulAviya mA mozhi mEru nEr iLa mA mulai
sEl ulAviya kUr vizhi – kumizh nAsi

thAr ulAviya neeL kuzhal vEy aLAviya thOLiyar
sArpilE thirivEnai nin – aruLAlE

sAma vEthiyar vAnavar Othi nAN malar thUviya
thALil veezha vinA mika – aruLvAyE

kAr ulAviya neeL puna vEdar mAl varai meethu uRai
kAval mAthinodu Aval seythu – aNaivOnE

kANa Akama vEtha purANa nUl pala Othiya
kAraNA karuNAkara – murukOnE

pOr ulAviya cUranai vAri sERu ezha vEl vidu
bUpa sEvaka mA mayil – misaiyOnE

pOthan mAdhavan mAthu umai pAthi AthiyumE thozhu
pOri mA nakar mEviya – perumALE.