திருப்புகழ் 714 சுருதி மறைகள் (உத்தரமேரூர்)

Thiruppugal 714 Surudhimaraigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான – தனதான

சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் – சுடர்மூவர்

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் – மறையோர்கள்

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி – யிவர்கூடி

அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூற – அருள்வாயே

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக – முதுசூரும்

மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி – வருநாய்கள்

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண – மயிலேறி

நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான – தனதான

சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள்
துகளில் இருடி யெழுபேர்கள் – சுடர்மூவர்

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவில் உடுவின் உலகோர்கள் – மறையோர்கள்

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியும் அயனும் ஒருகோடி – யிவர்கூடி

அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும்
அறிவுள் அறியும் அறிவூற – அருள்வாயே

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக
மகர சலதி அளறாக – முதுசூரும்

மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி – வருநாய்கள்

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத
நமனும் வெருவி யடிபேண – மயிலேறி

நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையும் இமையோர்கள் – பெருமாளே

English

surudhi maRaigaL irunAlu dhisaiyil adhipar munivOrgaL
thugaLil irudi yezhupErgaL – sudarmUvar

solavil mudivil mugiyAdha pagudhi purudar navanAdhar
tholaivi luduvi nulagOrgaL – maRaiyOrgaL

ariya samaya morukOdi amarar saraNar sathakOdi
ariyum ayanu morukOdi – yivarkUdi

aRiya aRiya aRiyAtha adika LaRiya adiyEnum
aRivuL aRiyum aRivURa – aruLvAyE

varaigaL thavidu podiyAga nirudhar pathiyum azhivAga
magara saladhi aLaRAga – mudhusUrum

madiya alagai nadamAda vijaya vanithai magizhvAga
mavuli sidhaRi iraithEdi – varunAygaL

narigaL kodigaL pasiyARa udhira nadhigaL alaimOdha
namanum veruvi adipENa – mayilERi

naLina ubaya karavElai mudugu muruga vadamEru
nagari uRaiyum imaiyOrgaL – perumALE.

English Easy Version

surudhi maRaigaL irunAlu dhisaiyil adhipar munivOrgaL
thugaLil irudi yezhupErgaL – sudarmUvar

solavil mudivil mugiyAdha pagudhi purudar navanAdhar
tholaivi luduvi nulagOrgaL – maRaiyOrgaL

ariya samaya morukOdi amarar saraNar sathakOdi
ariyum ayanu morukOdi – yivarkUdi

aRiya aRiya aRiyAtha adika LaRiya adiyEnum
aRivuL aRiyum aRivURa – aruLvAyE

varaigaL thavidu podiyAga nirudhar pathiyum azhivAga
magara saladhi aLaRAga – mudhusUrum

Madiya alagai nadamAda vijaya vanithai magizhvAga
mavuli sidhaRi iraithEdi – varunAygaL

narigaL kodigaL pasiyARa udhira nadhigaL alaimOdha
namanum veruvi adipENa – mayilERi

naLina ubaya karavElai mudugu muruga vadamEru
nagari uRaiyum imaiyOrgaL – perumALE.