திருப்புகழ் 715 தோல் எலும்பு (உத்தரமேரூர்)

Thiruppugal 715 Tholelumbu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த – தனதான

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்ட மாயு ருண்டு – வடிவான

தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று – துயராற

ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள் – புகழ்தாளும்

ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
யாடல் வென்றி வேலு மென்று – நினைவேனோ

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த – முருகோனே

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க – ளுறைவோனே

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச – அணைவோனே

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த – தனதான

தோலெலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்டமாயுருண்டு – வடிவான

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான்மெலிந்து
சோரு மிந்த நோய் அகன்று – துயராற

ஆல முண்ட கோன் அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன்
ஆரணங்கள் ஆகமங்கள் – புகழ்தாளும்

ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் அங்கை
யாடல் வென்றி வேலும் என்று – நினைவேனோ

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை
வாணி பஞ்ச பாணி தந்த – முருகோனே

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெருஞ் சராசரங்கள் – உறைவோனே

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச – அணைவோனே

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற
மேரு மங்கை யாள வந்த – பெருமாளே

English

thOl elumbu see narambu peeLai thundru kOzhai pongu
sOri pinda mAy urundu – vadivAna

thUla panga kAyam vambilE sumandhu nAnmelindhu
sOrum indha nOy agandru – thuyarARa

Ala munda kOn akanda lOka munda mAlvirinja
nAra NangaL Aga mangaL – pugazhthALum

Ana nangaL mUvi randum ARirandu thOLu mangai
Adal vendri vElu mendru – ninaivEnO

vAla chandRa chUdi chandha vEdha manthra rUpi ambai
vANi pancha pANi thandha – murugOnE

mAyai aindhu vEgamaindhu bUtham aindhu nAdham aindhu
vAzh perum sarAsa rangaL – uRaivOnE

vElai anbu kUra vandha Eka dhantha yAnai kaNdu
vEdar mangai Odi anja – aNaivOnE

veera mangai vAri mangai pArin mangai mEvugindra
mEru mangai ALa vandha – perumALE.

English Easy Version

thOl elumbu see narambu peeLai thundru kOzhai
pongu sOri pinda mAy urundu – vadivAna

thUla panga kAyam vambilE sumandhu nAnmelindhu
sOrum indha nOy agandru – thuyarARa

Ala munda kOn akanda lOka munda mAlvirinjan
Ara NangaL Aga mangaL – pugazhthALum

Ana nangaL mUvi randum ARirandu thOLum angai
Adal vendri vElumendru – ninaivEnO

vAla chandRa chUdi chandha vEdha manthra rUpi ambai
vANi pancha pANi thandha – murugOnE

mAyai aindhu vEgamaindhu bUthamaindhu nAdhamaindhu
vAzh perum sarAsa rangaL – uRaivOnE

vElai anbu kUra vandha Eka dhantha yAnai kaNdu
vEdar mangai Odi anja – aNaivOnE

veera mangai vAri mangai pArin mangai mEvugindra
mEru mangai ALa vandha – perumALE