திருப்புகழ் 716 நீள் புயல் குழல் (உத்தரமேரூர்)

Thiruppugal 716 Neelpuyalkuzhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானனத் தனதான தானனத் தனதான
தானனத் தனதான – தனதான

நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு – நெறிகெடாய்

நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை – நினையாதே

பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
பாடலுற் றிடவேசெய் – திடுமோச

பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு – பணியாயோ

ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு – மனைவோரும்

ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு – மறையோரும்

வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை – மயிலேறி

மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான – பெருமாளே.

பதம் பிரித்தது

தானனத் தனதான தானனத் தனதான
தானனத் தனதான – தனதான

நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி
நேசம் உற்று அடியேனு(ம்) – நெறி கேடாய்

நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி
நீதியில் சிவ வாழ்வை – நினையாதே

பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ஒரு கோடி
பாடல் உற்றிடவே செய்திடு – மோச

பாவி எப்படி வாழ்வன் நேயர்கட்கு உளதான
பார்வை சற்று அருளோடு – பணியாயோ

ஆழியில் துயில்வோனும் மா மலரப் பிரமாவும்
ஆகமப் பொருளோரும் – அனைவோரும்

ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும்
ஆயிரத்து இருநூறு – மறையோரும்

வாழும் உத்தரமேரூர் மேவி அற்புதமாக
வாகு சித்திர தோகை – மயில் ஏறி

மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல
மான் மகட்கு உளனான – பெருமாளே,

English

neeLpuyaR kuzhalmAthar pEriniR krupaiyAki
nEsamut RadiyEnu – neRikedAy

nEmiyiR poruLthEdi yOdiyeyth thuLamvAdi
neethiyiR sivavAzhvai – ninaiyAthE

pAzhinuk kiraiyAya nAmamvaith thorukOdi
pAdalut RidavEsey – thidumOsa

pAviyep padivAzhva nEyarkat kuLathAna
pArvaisat RaruLOdu – paNiyAyO

Azhiyit RuyilvOnu mAmalarp piramAvu
mAkamap poruLOru – manaivOrum

Anaimath thakavOnum njAnamut RiyalvOru
mAyirath thirunURu – maRaiyOrum

vAzhumuth tharamErur mEviyaR puthamAka
vAkusith thirathOkai – mayilERi

mARenap porucUra neeRezhap porumvEla
mAnmakat kuLanAna – perumALE.

English Easy Version

neeL puyal kuzhal mAthar pErinil krupaiyAki
nEsam utRu adiyEnu(m) – neRi kEdAy

nEmiyil poruL thEdi Odi eyththu uLLam vAdi
neethiyil siva vAzhvai – ninaiyAthE

pAzhinukku iraiyAya nAmam vaiththu oru kOdi
pAdal utRidavE seythidu – mOsa

pAvi eppadi vAzhvan nEyarkatku uLathAna
pArvai satRu aruLOdu – paNiyAyO

Azhiyil thuyilvOnum mA malarap piramAvum
Akamap poruLOrum – anaivOrum

Anai maththakavOnum njAnam utRu iyalvOrum
Ayiraththu irunURu – maRaiyOrum

vAzhum uththaramErUr mEvi aRputhamAka
vAku siththira thOkai – mayil ERi

mARu enap poru cUran neeRu ezhap porum vEla
mAn makadku uLanAna – perumALE.