Thiruppugal 717 Madharkongkaiyil
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன – தனதான
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
வாச மென்குழ லிற்சே லைப்பொரும் – விழிவேலில்
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் – மயலாகி
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
ஆகி நின்றுத வித்தே நித்தலும் – அலைவேனோ
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
ஆயி ரங்கலை கத்தா மத்திப
னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் – புரிவாயே
சாத னங்கொடு தத்தா மெத்தென
வேந டந்துபொய் பித்தா வுத்தர
மேதெ னும்படி தற்காய் நிற்பவர் – சபையூடே
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
நீதி தந்திர நற்சார் புற்றருள்
சால நின்றுச மர்த்தா வெற்றிகொ – ளரன்வாழ்வே
வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் – மறையோர்வாழ்
மேரு மங்கையி லத்தா வித்தக
வேலொ டும்படை குத்தா வொற்றிய
வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன – தனதான
மாதர் கொங்கையில் வித்தாரத் திரு
மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில்
வாச மென் குழலில் சேலைப் பொரும் – விழி வேலில்
மாமை ஒன்று(ம்) மலர்த் தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த் தாமத்தினில்
வான் இளம் பிறையைப் போல் நெற்றியில் – மயலாகி
ஆதரம் கொ(ண்)டு கெட்டே இப்படி
ஆசையின் கடலுக்கே மெத்தவும்
ஆகி நின்று தவித்தே நித்தலும் – அலைவேனோ
ஆறு இரண்டு பணை தோள் அற்புத
ஆயிரம் கலை க(ர்)த்தா மத்திபனாய்
உழன்று அலைகிற்பேனுக்கு அருள் – புரிவாயே
சாதனம் கொ(ண்)டு தத்தா மெத்தெனவே
நடந்து பொய் பித்தா உத்தரம்
ஏது எனும் படி தன் காய் நிற்பவர் – சபை ஊடே
தாழ்வு இல் சுந்தரனைத் தான் ஒற்றி கொள்
நீதி தந்திர நல் சார்பு உற்று அருள்
சால நின்று சமர்த்தா வெற்றி கொள் – அரன் வாழ்வே
வேதமும் கிரியைச் சூழ் நித்தமும்
வேள்வியும் புவியில் தாபித்து அருள்
வேர் விழும்படி செய்த ஏர் மெய்த் தமிழ் – மறையோர் வாழ்
மேரு மங்கையில் அத்தா வித்தக
வேலொடும் படை குத்தா ஒற்றிய
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் – பெருமாளே.
English
mAthar kongaiyil viththA raththiru
mArpi langiyal muththA raththinil
vAsa menkuzha liRchE laipporum – vizhivElil
mAmai yonRuma larththAL vaippinil
vAku vanjiyil meyththA maththinil
vAni LampiRai yaippOl netRiyil – mayalAki
Atha ramkodu kettE yippadi
Asai yinkada lukkE meththavum
Aki ninRutha viththE niththalum – alaivEnO
ARi raNdupa NaiththO LaRputha
Ayi ramkalai kaththA maththipa
nAyu zhanRalai kiRpE nukkaruL – purivAyE
sAtha namkodu thaththA meththena
vEna danthupoy piththA vuththara
mEthe numpadi thaRkAy niRpavar – sapaiyUdE
thAzhvil sunthara naiththA notRikoL
neethi thanthira naRchAr putRaruL
sAla ninRusa marththA vetRiko – LaranvAzhvE
vEtha mungiri yaiccUzh niththamum
vELvi yumpuvi yitRA piththaruL
vErvi zhumpadi seyththEr meyththamizh – maRaiyOrvAzh
mEru mangaiyi laththA viththaka
vElo dumpadai kuththA votRiya
vEdar mangaikoL siththA paththarkaL – perumALE.
English Easy Version
mAthar kongaiyil viththArath thiru
mArpil ilangu iyal muththu Araththinil
vAsa men kuzhalil sElaip porum – vizhi vElil
mAmai onRu(m) malarth thAL vaippinil
vAku vanjiyil meyth thAmaththinil
vAn iLam piRaiyaip pOl netRiyil – mayalAki
Atharam ko(N)du kettE ippadi
Asaiyin kadalukkE meththavum
Aki ninRu thaviththE niththalum – alaivEnO
ARu iraNdu paNai thOL aRputha
Ayiram kalai ka(r)ththA maththipanAy
uzhanRu alaikiRpEnukku – aruL purivAyE
sAthanam ko(N)du thaththA meththenavE
nadanthu poy piththA uththaram
Ethu enum padi than kAy niRpavar – sapai UdE
thAzhvu il suntharanaith thAn otRi koL
neethi thanthira nal sArpu utRu aruL
sAla ninRu samarththA vetRi koL – aran vAzhvE
vEthamum kiriyaic cUzh niththamum
vELviyum puviyil thApiththu aruL
vEr vizhumpadi seytha Er meyth thamizh – maRaiyOr vAzh
mEru mangaiyil aththA viththaka
vElodum padai kuththA otRiya
vEdar mangai koL siththA paththarkaL – perumALE.