Thiruppugal 719 Sayilaangkanaikku
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த – தனதான
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர் – வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர் – உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த – வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு – றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து – சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட – முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர – மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த – தனதான
சயில அங்கனைக்கு உருகி இடப்பக்கங்
கொடுத்த கம்பர் – வெகுசாரி
சதிதாண்டவத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர் – உரைமாளச்
செயல்மாண்டு சித்தம் அவி நித்தத்
த்வம் பெறப் பகர்ந்த – உபதேசம்
சிறியேன்தனக்கும் உரைசெயில்
சற்றுங் குருத்துவம் – குறையுமோதான்
அயில்வாங்கி யெற்றி உததியிற் கொக்
கன் தனைப்பி ளந்து – சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியினிற் சுற்றும்
திறற் ப்ரசண்ட – முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகுலப்பொற்
குன்றிடித்த சங்க்ரம – விநோதா
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்
பலத்து அமர்ந்த – பெருமாளே
English
sayilAnga naik urugi idap pak
kang koduththa kambar – vegusAri
sathi thANda vaththar sadai yidaththu
gangai vaiththa nambar – uraimALa
seyal mANdu chiththam avizha niththath
thvam peRap pagarndha – upadhEsam
siRiyEn thanakku murai seyiR sat
Run guruththuvang – kuRaiyumOthAn
ayil vAngi etri udhadhi yiRkok
kandranaip piLandhu – surarvAzha
akilAnda mutru nodiyiniR sut
runthiRaR prachaNda – muzhuneela
mayil thANda vittu mudhu kulap poR
kundri diththa sangrama – vinOdhA
madhurAntha kaththu vada thiruch chitr
ambalath amarndha – perumALE.
English Easy Version
sayilAnga naik urugi idap pakkang
koduththa kambar – vegusAri
sathi thANda vaththar sadai yidaththu
gangai vaiththa nambar – uraimALa
seyal mANdu chiththam avizha niththath
thvam peRap pagarndha – upadhEsam
siRiyEn thanakku murai seyiR satRun
guruththuvang kuRaiyu – mOthAn
ayil vAngi etri udhadhi yiRkok
kandranaip piLandhu – surarvAzha
akilAnda mutru nodiyiniR sutrun
thiRaR prachaNda – muzhuneela
mayil thANda vittu mudhu kulap poRkundri
diththa sangrama – vinOdhA
madhurAntha kaththu vada thiruch
chitrambalath amarndha – perumALE.