திருப்புகழ் 720 மனைமாண்சுத ரான (மதுராந்தகம்)

Thiruppugal 720 Manaimansudharana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன – தந்ததான

மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு – வம்பராதி

மயமாம்பல வான கணங்குல
மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி – யின்பசார

இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன – வும்பரேசா

இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடமாங்கன தாள ருளும்படி – யென்றுதானோ

தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில் – எம்பிரானார்

தமதாஞ்சுத தாப ரசங்கம
மெனவோம்புறு தாவ னவம்படர்
தகுதாம்பிர சேவி தரஞ்சித – வும்பர்வாழ்வே

முனவாம்பத மூடி கவந்தன
முயல்வான்பிடி மாடி மையைங்கரர்
முகதாம்பின மேவு றுசம்ப்ரம – சங்கணாறு

முககாம்பிர மோட மர்சம்பன
மதுராந்தக மாந கரந்திகழ்
முருகாந்திர மோட மரும்பர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன – தந்ததான

மனை மாண் சுதர் ஆன சுணங்கரும்
மனம் வே(கு)ம் திணையான தனங்களும்
மடிவேன் தனை ஈண அணங்கு உறு – வம்பர் ஆதி

மயமாம் பல பலவான கணம் குலம்
என ப்ராந்தியும் யான் எனது என்று
உறுவனவாம் பிரமாத குணம் குறி – இன்ப சார

இன வா(வு)ம்பரி தான்ய தனம் பதி
விட ஏன்று எனை மோன தடம் பர
மிகுதாம் பதி காண கணம் கன – உம்பர் ஏசா

இட ஆர்ந்தன சானு நயம் பெறு
கடகாம் கர சோண வியம் பர
இடமாம் கன தாள் அருளும் படி – என்று தானோ

தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம் பரமான நடம் பயில் – எம்பிரானார்

தமது ஆம் சுத தாபர(ம்) சங்கமம்
என ஓம்புறு தாவன வம்பு அடர்
தகு தாம்பிர சேவித ரஞ்சித – உம்பர் வாழ்வே

முன வா(வு)ம் பத மூடிக வந்தன(ம்)
முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர்
முகதா ஆம் பி(ன்)ன மேவுறு சம்ப்ரம – சம் கண ஆறு

முக காம்பிரமோடு அமர் சம்ப(ன்)ன
மதுராந்தக மா நகரம் திகழ்
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் – தம்பிரானே

English

manaimANsutha rAna suNangaru
manamvEnthiNai yAna thanangaLu
madivEnRanai yeeNa aNanguRu – vamparAthi

mayamAmpala vAna kaNangula
menaprAnthiyum yAne nathenRuRu
vaNavAmpira mAtha kuNanguRi – yinpasAra

inavAmpari thAnya thanampathi
vidaEnRenai mOna thadampara
mikuthAmpathi kANa kaNangana – vumparEsA

idavArnthana sAnu nayampeRu
kadakAngara sONa viyampara
idamAngana thALa ruLumpadi – yenRuthAnO

thanathAnthana thAna thananthana
thenathOngida thOna thunangida
thanavAmpara mAna nadampayil – empirAnAr

thamathAnjutha thApa rasangama
menavOmpuRu thAva navampadar
thakuthAmpira sEvi tharanjitha – vumparvAzhvE

munavAmpatha mUdi kavanthana
muyalvAnpidi mAdi maiyaingarar
mukathAmpina mEvu Rusamprama – sangaNARu

mukakAmpira mOda marsampana
mathurAnthaka mAna karanthikazh
murukAnthira mOda marumparkaL – thambirAnE.

English Easy Version

manai mAN suthar Ana suNangarum
manam vE(ku)m thiNaiyAna thanangaLum
madivEn thanai eeNa aNangu uRu – vampar Athi

mayamAm pala palavAna kaNam kulam
ena prAnthiyum yAn enathu enRu
uRuvanavAm piramAtha kuNam kuRi – inpa sAraina

vA(vu)mpari thAnya thanam pathi
Vida EnRu enai mOna thadam para
mikuthAm pathi kANa kaNam kana – umpar EsA

ida Arnthana sAnu nayam peRu
kadakAm kara sONa viyam para
idamAm kana thAL aruLum padi – enRu thAnO

thanathAnthana thAna thananthana
thenathOngida thOna thunangida
thanavAm paramAna nadam payil – empirAnAr

thamathu Am sutha thApara(m) sangamam
ena OmpuRu thAvana vampu adar
thaku thAmpira sEvitha ranjitha – umpar vAzhvE

muna vA(vu)m patha mUdika vanthana(m)
muyalvAn pidi mAdu imai aingarar
mukathA Am pi(n)na mEvuRu samprama – sam kaNa ARu

muka kAmpiramOdu amar sampa(n)na
mathurAnthaka mA nakaram thikazh
murukA am thiramOdu amar umparkaL – thambirAnE