Thiruppugal 721 Mugilamenumvar
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன – தனதான
முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை – புரிமாதர்
முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய – மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட – நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர்
அவர்பாயலி லேயடி யேனுட – லழிவேனோ
ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட – விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை – யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி – மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள்பட வேயயி லேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன – தனதான
முகில் ஆம் எனும் வார் குழலார் சிலை
புருவார் கயல் வேல் விழியார் சசி
முகவார் தரள(ளா)ம் எனவே நகை – புரி மாதர்
முலை மால் இணை கோபுரமாம் என
வடம் ஆடிடவே கொடி நூல் இடை
முது பாளித சேலை குலாவிய மயில் – போல்வார்
அகிசேர் அல்குலார் தொடை வாழையின்
அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு
அழகார் கன நூபுரம் ஆடிட – நடை மேவி
அ(ன்)னமாம் என யாரையும் மால் கொள
விழியால் சுழலா விடு பாவையர்
அவர் பாயலிலே அடியேன் உடல் – அழிவேனோ
ககனார் பதியோர் முறை கோ என
இருள்கார் அசுரார் படை தூள் பட
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட – விடும் வேலா
கமல ஆலய நாயகி வானவர்
தொழும் ஈசுரனார் இடம் மேவிய
கருணாகர ஞான பராபரை – அருள் பாலா
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு
உடன் ஆட நிலா மயில் கோகில(ம்)
மகிழ் நாடு உறை மால் வ(ள்)ளி நாயகி – மணவாளா
மதி மா முகவா அடியேன் இரு
வினை தூள்படவே அயில் ஏவிய
வளவாபுரி வாழ் மயில் வாகன – பெருமாளே.
English
mukilAmenum vArkuzha lArsilai
puruvArkayal vElvizhi yArsasi
mukavArthara LAmena vEnakai – purimAthar
mulaimAliNai kOpura mAmena
vadamAdida vEkodi nUlidai
muthupALitha sElaiku lAviya – mayilpOlvAr
akisEralku lArthodai vAzhaiyin
azhakArkazha lArthara vEytharu
azhakArkana nUpura mAdida – nadaimEvi
anamAmena yAraiyu mAlkoLa
vizhiyAlchuzha lAvidu pAvaiyar
avarpAyali lEyadi yEnuda – lazhivEnO
kakanArpathi yOrmuRai kOvena
iruLkArasu rArpadai thULpada
kadalEzhkiri nAkamu nURida – vidumvElA
kamalAlaya nAyaki vAnavar
thozhumeesura nArida mEviya
karuNAkara njAnapa rAparai – yaruLbAlA
makizhmAlathi nAvalpa lAkamu
kudanAdani lAmayil kOkila
makizhnAduRai mAlvaLi nAyaki – maNavALA
mathimAmuka vAvadi yEniru
vinaithULpada vEyayi lEviya
vaLavApuri vAzhmayil vAkana – perumALE.
English Easy Version
mukil Am enum vAr kuzhalAr silai
puruvAr kayal vEl vizhiyAr sasi
mukavAr tharaLa(a)m enavE nakai – puri mAthar
mulai mAl iNai kOpuramAm ena
vadam AdidavE kodi nUl idai
muthu pALitha sElai kulAviya – mayil pOlvAr
akisEr alkulAr thodai vAzhaiyin
azhaku Ar kazhal Arthara Eytharu
azhakAr kana nUpuram Adida – nadai mEvi
a(n)namAm ena yAraiyum mAl koLa
vizhiyAl chuzhalA vidu pAvaiyar
avar pAyalilE adiyEn udal – azhivEnO
kakanAr pathiyOr muRai kO ena
iruLkAr asurAr padai thUL pada
kadal Ezh kiri nAkamum nURida – vidum vElA
kamala Alaya nAyaki vAnavar
thozhum eesuranAr idam mEviya
karuNAkara njAna parAparai – aruL pAlA
makizh mAlathi nAval palA kamuku
udan Ada nilA mayil kOkila(m)
makizh nAdu uRai mAl va(L)Li nAyaki – maNavALA
mathi mA mukavA adiyEn iru
vinai thULpadavE ayil Eviya
vaLavApuri vAzh mayil vAkana – perumALE