திருப்புகழ் 722 கலகலெனச் சில (திருவக்கரை)

Thiruppugal 722 Kalakalenachchila

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன – தனதானா

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி – துரையாதே

கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை – யிடைவீழா

உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி – யடிநாயேன்

உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத – மருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு – மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் – மணிமார்பா

அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை – யுறைவோனே

அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன – தனதானா

கலகலெனச்சில கலைகள் பிதற்றுவது
ஒழிவ(து) உனைச் – சிறிதுரையாதே

கருவழி தத்திய மடுவதனிற் புகு
கடுநரகுக்கிடை – யிடைவீழா

உலகு தனிற்பல பிறவி தரித்து
அறவுழல்வது விட்டினி – அடிநாயேன்

உனதடிமைத்திரள் அதனினும் உட்பட
உபய மலர்ப்பத – மருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசரனைப்பொரும் – அயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
குறமகளைப்புணர் – மணிமார்பா

அலைபுனலிற்றவழ் வளைநிலவைத்தரு
மணி திருவக்கரையு – றைவோனே

அடியவர் இச்சையில் எவையெவை யுற்றன
அவை தருவித்தருள் – பெருமாளே

English

kala kalena sila kalaigaL pidhatruvadh
ozhivadh unai siRidh – uRaiyAdhE

karuvazhi thaththiya maduva thaniR pugu
kadu naraguk idai – idaiveezhA

ulagu thaniR pala piRavi dharith aRa
uzhal vadhu vittini – adinAyEn

unadhadi maith thiraL adhaninum utpada
ubaya malarp padham – aruLvAyE

kulagiri pottezha alai kadal vatrida
nisicharanaip poru – mayilveerA

guNadhara viththaga kumara punaththidai
kuRamaga Laip puNar – maNimArbA

alaipuna lil thavazh vaLainila vaith tharu
maNithiru vakkarai – uRaivOnE

adiyavar ichchaiyil evai evai utrana
avai thaRu viththaruL – perumALE.

English Easy Version

kala kalena sila kalaigaL pidhatruvadh
Ozhivadhu unai siRidh – uRaiyAdhE

karuvazhi thaththiya maduva thaniR pugu
kadu naraguk idai – idaiveezhA

ulagu thaniR pala piRavi dharith aRa
uzhal vadhu vittini – adinAyEn

unadhadi maith thiraL adhaninum utpada
ubaya malarp padham – aruLvAyE

kulagiri pottezha alai kadal vatrida
nisicharanaip porum – ayilveerA

guNadhara viththaga kumara punaththidai
kuRamaga Laip puNar – maNimArbA

alaipuna lil thavazh vaLainila vaith tharu
maNithiru vakkarai – uRaivOnE

adiyavar ichchaiyil evai evai utrana
avai thaRu viththaruL – perumALE