திருப்புகழ் 723 பச்சிலை இட்டு (திருவக்கரை)

Thiruppugal 723 Pachchilaiittu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன – தனதான

பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட – நினைவோர்கள்

பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை – யிதழூறல்

எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு – மடமாதர்

இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத – மருள்வாயே

நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள – வணிமார்பர்

நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
நட்டர வப்பணி சுற்றிம தித்துள
நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் – மருகோனே

கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
றத்தித னக்கும னப்ரிய முற்றிடு – குமரேசா

கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன – தனதான

பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள்
குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப் பொருள் பற்றிட – நினைவோர்கள்

பத்தி நிரைத் தவளத் தரளத்தினை
ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள்
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை – இதழ் ஊறல்

எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில்
இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும்
எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் – மடமாதர்

இச்சையில் இப்படி நித்தம் மனத் துயர்
பெற்று உலகத்தவர் சிச் சி எனத் திரி
இத்தொழில் இக்குணம் விட்டிட நல் பதம் – அருள்வாயே

நச்சு அரவில் துயில் பச்சை முகில்
கருணை கடல் பத்ம மலர்த் திருவைப் புணர்
நத்து தரித்த கரத்தர் திருத்துளவ(ம்) – அணி மார்பர்

நட்ட நடுக் கடலில் பெரு வெற்பினை
நட்டு அரவப் பணி சுற்றி மதித்து உள
நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் – மருகோனே

கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி
சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி
குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு – குமரேசா

கொத்து அவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு
குற்ற மறக் கடிகைப் புனல் சுற்றிய
கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை – பெருமாளே

English

pacchilai yittumu kaththaimi nukkikaL
kuththira viththaimi kuththasa marththikaL
pappara mattaikaL kaipporuL patRida – ninaivOrkaL

paththini raiththava Laththara Laththinai
yoththana kaippilvi zhippilma yakkikaL
pakshami kuththida mukkani sarkkarai – yithazhURal

ecchila Lippavar kacchaNi meththaiyil
icchaka meththavu raiththuna yaththodu
meththiya zhaiththua Naiththuma yakkidu – madamAthar

icchaiyi lippadi niththama naththuyar
petRula kaththavar chicchiye naththiri
iththozhi likkuNam vittida naRpatha – maruLvAyE

nacchara vitRuyil pacchaimu kiRkaru
Naikkadal pathmama larththiru vaippuNar
naththutha riththaka raththarthi ruththuLa – vaNimArpar

nattana dukkada liRperu veRpinai
nattara vappaNi sutRima thiththuLa
naththamu thaththaiye zhuppiya Liththavar – marukOnE

kocchaimo zhicchika Ruththavi zhicchisi
Ruththai daicchipe ruththatha naththiku
Raththitha nakkuma napriya mutRidu – kumarEsA

koththavizh pathmama larppazha naththodu
kutRama Rakkadi kaippunal sutRiya
kotpuLa natRiru vakkarai yutRuRai – perumALE.

English Easy Version

pacchilai ittu mukaththai minukkikaL
kuththira viththai mikuththa samarththikaL
pappara mattaikaL kaip poruL patRida – ninaivOrkaL

paththi niraith thavaLath tharaLaththinai
oththa nakaippil vizhippil mayakkikaL
paksham mikuththida mukkani sarkkarai – ithazh URal

ecchil aLippavar kacchu aNi meththaiyil
icchakam meththa uraiththu nayaththodum
eththi azhaiththu aNaiththu mayakkidum – madamAthar

icchaiyil ippadi niththam manath thuyar
petRu ulakaththavar chic chi enath thiri
iththozhil ikkuNam vittida nal patham – aruLvAyE

nacchu aravil thuyil pacchai mukil karuNai
kadal pathma malarth thiruvaip puNar
naththu thariththa karaththar thiruththuLava (m) – aNi mArpar

natta naduk kadalil peru veRpinai
nattu aravap paNi sutRi mathiththu uLa
naththum amuthaththai ezhuppi aLiththavar – marukOnE

kocchai mozhicchi kaRuththa vizhicchi
siRuththa idaicchi peruththa thanaththi
kuRaththi thanakku manam priyam utRidu – kumarEsA

koththu avizh pathma malarpf pazhanaththodu
kutRa maRak kadikaip punal sutRiya
kodpu uLa nal thiruvakkarai utRu uRai – perumALE