திருப்புகழ் 724 அண்டர்பதி குடியேற (சிறுவை)

Thiruppugal 724 Andarpadhikudiyera

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான – தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற – வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு – மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு – மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி – வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள – வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு – வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய – முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான – தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற – அருளாலே

அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு – மகிழ்வாக

மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
மஞ்சினனும் அயனாரும் – எதிர்காண

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடன் ஆடி – வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள – வுயர்தோளா

பொங்குகடலுடன் நாகம் விண்டு வரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு – வடிவேலா

தண் தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய – முருகேசா

சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு – பெருமாளே.

English

aNdarpadhi kudi ERa maNdasurar urumARa
aNdar mana magizh meeRa – aruLAlE

anthariyo dudanAdu sankaranu magizh kUra
aingkaranum umai ALu – magizhvAga

maNdalamu munivOrum eNdhisaiyil uLa pEru
manjinanum ayanArum – edhirkANa

mangai udan arithAnum inbamuRa magizh kURa
maindhu mayiludan Adi – varavENum

puNdarika vizhiyALa aNdar magaL maNavALa
pundhi niRai aRivALa – uyarthOLA

pongu kadaluda nAgam viNduvarai igalsAdu
pon paravu kadhir veesu – vadivElA

thaNdaraLa maNi mArba sempon ezhil seRi rUpa
thaNdamizhin migu nEya – murugEsA

santhathamum adiyArgaL chinthaiyadhu kudiyAna
thaN siRuvai thanil mEvu – perumALE.

English Easy Version

aNdarpadhi kudi ERa maNdasurar urumARa
aNdar mana magizh meeRa – aruLAlE

anthariyo dudanAdu sankaranu magizh kUra
aingkaranum umai ALu – magizhvAga

maNdalamu munivOrum eNdhisaiyil uLa pEru
manjinanum ayanArum – edhirkANa

mangai udan arithAnum inbamuRa magizh kURa
maindhu mayiludan Adi – varavENum

puNdarika vizhiyALa aNdar magaL maNavALa
pundhi niRai aRivALa – uyarthOLA

pongu kadaluda nAgam viNduvarai igalsAdu
pon paravu kadhir veesu – vadivElA

thaNdaraLa maNi mArba sempon ezhil seRi rUpa
thaNdamizhin migu nEya – murugEsA

santhathamum adiyArgaL chinthaiyadhu kudiyAna
thaN siRuvai thanil mEvu – perumALE