Thiruppugal 726 Piraviyanajadam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த – தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று – தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி – யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை – யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று – பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து – வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த – முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து – சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த – தனதான
பிறவியான சடமிறங்கி வழியிலாத துறைசெறிந்து
பிணிகளான துயருழன்று – தடுமாறி
பெருகு தீய வினையி னொந்து கதிகடோறும் அலைபொருந்தி
பிடிபடாத ஜனன நம்பி – யழியாதே
நறைவிழாத மலர்முகந்த அரிய மோன வழிதிறந்த
நளின பாத மெனது சிந்தை – யகலாதே
நரர் சுராதிபரும்வணங்கும் இனிய சேவை தனைவி ரும்பி
நலனதாக அடிய னென்று – பெறுவேனோ
பொறிவழாத முநிவர் தங்கள் நெறிவழாத பிலனு ழன்று
பொருநிசாசரனைநினைந்து – வினைநாடி
பொருவிலாமல் அருள்புரிந்து மயிலினேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்புனைந்த – முருகோனே
சிறுவராகி யிருவர் அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல்
சிலையிராமனுடனெதிர்ந்து – சமராடி
செயமதான நகர் அமர்ந்த அளகை போல வளமிகுந்த
சிறுவை மேவி வரமி குந்த – பெருமாளே
English
piRaviyAna jadam iRangi vazhi ilAdha thuRai seRindhu
piNigaLAna thuyar uzhandru – thadumARip
perugu theeya vinaiyi nondhu gathigaL thORu malai porundhi
pidi padAdha janana nambi – azhiyAdhE
naRai vizhAdha malar mugandha ariya mOna vazhi thiRandha
naLina pAdham enadhu chinthai – agalAdhE
narar surAdhiparum vaNangum iniya sEvai thanai virumbi
nalanadhAga adiyan endru – peRuvEnO
poRi vazhAdha munivar thangaL neRi vazhAdha pilan uzhandru
poru nisAcha ranai ninaindhu – vinainAdip
poruv ilAmal aruL purindhu mayilinEri nodiyil vandhu
puLaga mEva thamizh punaindha – murugOnE
siRuvarAgi iruvar andha kari padhAdhi kodu porun sol
silai irAman udan edhirndhu – samarAdi
jeyam adhAna nagar amarndha aLagaipOla vaLamigundha
siRuvai mEvi vara migundha – perumALE.
English Easy Version
piRaviyAna jadam iRangi vazhi ilAdha thuRai seRindhu
piNigaLAna thuyar uzhandru – thadumARi
perugu theeya vinaiyi nondhu gathigaL thORum alai porundhi
pidi padAdha janana nambi – azhiyAdhE
naRai vizhAdha malar mugandha ariya mOna vazhi thiRandha
naLina pAdham enadhu chinthai – agalAdhE
narar surAdhiparum vaNangum iniya sEvai thanai virumbi
nalanadhAga adiyan endru – peRuvEnO
poRi vazhAdha munivar thangaL neRi vazhAdha pilan uzhandru
poru nisAcha ranai ninaindhu – vinainAdi
poruv ilAmal aruL purindhu mayilinEri nodiyil vandhu
puLaga mEva thamizh punaindha – murugOnE
siRuvarAgi iruvar andha kari padhAdhi kodu porun sol
silai irAman udan edhirndhu – samarAdi
jeyam adhAna nagar amarndha aLagaipOla vaLamigundha
siRuvai mEvi vara migundha – perumALE.