Thiruppugal 727 Velirandu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன – தனதான
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் – விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல் – சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின – மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் – களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி – யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக – முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு – மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன – தனதான
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள்
காதலின் பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் – விலை கூறி
வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர்
வேசி என்பவராம் இசை மோகிகள்
மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் – சிறியேனும்
மால் அயன் பரனார் இமையோர்
முனிவோர் புரந்தரன் ஆதியரே தொழ
மா தவம் பெறு தாள் இணையே தினம் – மறவாதே
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே
விரும்பி வினாவுடனே தொழ
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் – களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாடகம் பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி – உமை காளி
நேயர் பங்கு எழு மாதவியாள்
சிவகாம சுந்தரியே தரு பாலக
நீர் பொரும் சடையார் அருள் தேசிக – முருகேச
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற
மா நிலங்கள் எல்லா நிலையே தரு
ஆயன் நம் திருவூரகம் மால் திரு – மருகோனே
ஆடகம் பயில் கோபுர மா மதில்
ஆலயம் பல வீதியுமே நிறைவான
தென் சிறுவாபுரி மேவிய – பெருமாளே.
English
vEli raNdenu neeLvizhi mAtharkaL
kAtha linporuL mEvina pAthakar
veeNil viNduLa nAdiya rUmaikaL – vilaikURi
vELai yenpathi lAvasai pEsiyar
vEsi yenpava rAmisai mOkikaL
meethu nenjazhi yAsaiyi lEyuzhal – siRiyEnum
mAla yanpara nArimai yOrmuni
vOr puranthara nAthiya rEthozha
mAtha vampeRu thALiNai yEthina – maRavAthE
vAzhtha rumsiva bOkana nUneRi
yEvi rumpi vinAvuda nEthozha
vAzhva rantharu vAyadi yEnidar – kaLaivAyE
neela sunthari kOmaLi yAmaLi
nAda kampayil nAraNi pUraNi
needu panjavi cUlini mAlini – yumaikALi
nEyar pangezhu mAthavi yALsiva
kAma sunthari yEtharu bAlaka
neerpo runjadai yAraruL thEsika – murukEsa
Alil ninRula kOrnilai yEpeRa
mAni langaLe lAnilai yEtharu
Aya nanthiru vUraka mAlthiru – marukOnE
Ada kampayil kOpura mAmathi
lAla yampala veethiyu mEniRai
vAna thensiRu vApuri mEviya – perumALE.
English Easy Version
vEl iraNdu enu neeL vizhi mAtharkaL
kAthalin poruL mEvina pAthakar
veeNil viNdu u(L)La nAdiyar UmaikaL – vilai kURi
vELai enpathu i(l)lA vasai pEsiyar
vEsi enpavarAm isai mOkikaL
meethu nenju azhi AsaiyilE uzhal – siRiyEnum
mAl ayan paranAr imaiyOr munivOr
purantharan AthiyarE thozha
mA thavam peRu thAL iNaiyE thinam – maRavAthE
vAzh tharum siva pOka nal nUl neRiyE
virumpi vinAvudanE thozha
vAzh varam tharuvAy adiyEn idar – kaLaivAyE
neela sunthari kOmaLi yAmaLi
nAdakam payil nAraNi pUraNi
needu panjavi sUlini mAlini – umai kALi
nEyar pangu ezhu mAthaviyAL
sivakAma sunthariyE tharu pAlaka
neer porum sadaiyAr aruL thEsika – murukEsa
Alil ninRu ulakOr nilaiyE peRa
mA nilangaL ellA nilaiyE tharu
Ayan nam thiruvUrakam mAl thiru – marukOnE
Adakam payil kOpura mA mathil
Alayam pala veethiyumE niRaivAna
then siRuvApuri mEviya – perumALE.