திருப்புகழ் 730 கருமுகில் போல் (திருவாமாத்தூர்)

Thiruppugal 730 Karumugilpol

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானத் தானன, தனதன தானத் தானன
தனதன தானத் தானன – தனதான

கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
கனியமு தூறித் தேறிய – மொழிமாதர்

கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
கனதன பாரக் காரிகள் – செயலோடே

பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
பொருளள வாசைப் பாடிகள் – புவிமீதே

பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
புரிவது தானெப் போதது – புகல்வாயே

தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
சமனிலை யேறப் பாறொடு – கொடிவீழத்

தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
தசையுண வேல்விட் டேவிய – தனிவீரா

அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
அழகுடை யாள்மெய்ப் பாலுமை – யருள்பாலா


அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர்தென் மாதைக் கேயுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானத் தானன, தனதன தானத் தானன
தனதன தானத் தானன – தனதான

கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு
கனி அமுது ஊறித் தேறிய – மொழி மாதர்

கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள்
கன தன பாரக் காரிகள் – செயலோடே

பொரு கயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக்காரிகள்
பொருள் அளவு ஆசைப் பாடிகள் – புவி மீதே

பொதுவிகள் போகப் பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்
புரிவது தான் எப்போது அது – புகல்வாயே

தரு அடு தீரச் சூரர்கள் அவர் கிளை மாளத் தூள் எழ
சமன் நிலை ஏறப் பாறொடு – கொடி வீழ

தனதன தானத் தானன என இசை பாடிப் பேய் பல
தசை உ(ண்)ண வேல் விட்டு ஏவிய – தனி வீரா

அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை
அழகு உடையாள் மெய்ப் பால் உமை – அருள் பாலா

அரவொடு பூளைத் தார் மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர் தென் மாதைக்கே உறை – பெருமாளே.

English

karumukil pOlmat tAkiya aLakikaL thEniR pAkodu
kaniyamu thURith thERiya – mozhimAthar

kalavikaL nErop pAkikaL mathanikaL kAmak krOthikaL
kanathana pArak kArikaL – seyalOdE

porukayal vALaith thAviya vizhiyinar cURaik kArikaL
poruLaLa vAsaip pAdikaL – puvimeethE

pothuvikaL pOkap pAvikaL vasamazhi vEnuk kOraruL
purivathu thAnep pOthathu – pukalvAyE

tharuvadu theerac cUrarkaL avarkiLai mALath thULezha
samanilai yERap pARodu – kodiveezhath

thanathana thAnath thAnana enaisai pAdip pEypala
thasaiyuNa vElvit tEviya – thaniveerA

arithiru mAlchak rAyutha navaniLai yAL muth thArnakai
azhakudai yALmeyp pAlumai – yaruLbAlA

aravodu pULaith thArmathi aRukodu vENic cUdiya
azhakarthen mAthaik kEyuRai – perumALE.

English Easy Version

karu mukil pOl mattAkiya aLakikaL thEnil pAkodu
kani amuthu URith thERiya – mozhi mAthar

kalavikaL nEr oppAkikaL mathanikaL kAma krOthikaL
kana thana pArak kArikaL – seyalOdE

poru kayal vALaith thAviya vizhiyinar cURaikkArikaL
poruL aLavu Asaip pAdikaL – puvi meethE

pothuvikaL pOkap pAvikaL vasam azhivEnukku Or aruL
purivathu thAn eppOthu athu – pukalvAyE

tharu adu theerac cUrarkaL avar kiLai mALath thUL ezha
saman nilai ERap pARodu – kodi veezha

thanathana thAnath thAnana ena isai pAdip pEy pala
thasai u(N)Na vEl vittu Eviya – thani veerA

ari thiru mAl sakrAyuthan avan iLaiyAL muththAr nakai
azhaku udaiyAL meyp pAl umai – aruL pAlA

aravodu pULaith thAr mathi aRukodu vENis cUdiya
3azhakar then mAthaikkE uRai – perumALE.