Thiruppugal 732 Achchayirukkani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த – தனதான
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க
ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து – உறவாடி
அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க
வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து
அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி – ரிலையாசை
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க
ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்
மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க – ளதனாலே
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து
வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து – திரிவேனோ
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி – நிலையாயே
எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த
முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி
யெக்கா லுமக்காத சூர்க்கொத் தரிந்த – சினவேலா
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து
சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து – மணமாகித்
தப்பா மலிப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்கா குமிப்பாரில் கீர்த்திக் கிசைந்த
தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த – தனதான
அச்சாய் இறுக்கு ஆணி காட்டிக் கடைந்த
செப்பு ஆர் முலைக் கோடு நீட்டி சரங்களைப்
போல் விழிக் கூர்மை நோக்கிக் குழைந்து – உறவாடி
அத்தான் எனக்கு ஆசை கூட்டித் தயங்க
வைத்தாய் எனப் பேசி மூக்கைச் சொறிந்து
அக்கால் ஒருக்காலம் ஏக்கற்று இருந்திர் – இ(ல்)லை ஆசை
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள்
ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன்
மட்டோ எனப் பாரின் மூர்க்கத்தனங்கள் – அதனாலே
மைப்பாகு எனக் கூறி வீட்டில் கொணர்ந்து
புல்பாயலில் காலம் வீற்றுக் கலந்து
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து – திரிவேனோ
எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த
பிச்சு ஆசருக்கு ஓதி கோட்டைக்கு இலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி – நிலையாயே
எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த
முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
எக்காலும் மக்காத சூர்க் கொத்து அரிந்த – சினவேலா
தச்சா மயில் சேவல் ஆக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குள் படிந்து
சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து – மணமாகி
தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கு இசைந்த
தச்சூர் வடக்காகு(ம்) மார்க்கத்து அமர்ந்த – பெருமாளே.
English
acchA yiRukkANi kAttik kadaintha
seppAr mulaikkOdu neettic charanga
LaippOl vizhikkUrmai nOkkik kuzhainthu – uRavAdi
aththA nenakkAsai kUttith thayanga
vaiththA yenappEsi mUkkaic choRinthu
akkA lorukkAla mEkkat Rirunthi – rilaiyAsai
vaicchA yeduppAna pEcchuk kidanga
LoppA runakkeedu pArkkiR kadampan
mattO enappArin mUrkkath thananga – LathanAlE
maippA kenakkURi veettiR koNarnthu
puRpA yaliRkAlam veetRuk kalanthu
vaippAr thamakkAsai yARpith thaLainthu – thirivEnO
ecchAy marutpAdu mERpat tiruntha
picchA sarukkOthi kOttaik kilanga
mikkA ninaippOrkaL veekkiR porunthi – nilaiyAyE
ettA mezhuththEzhai yERkup pakarntha
muththA valuppAna pOrkkut todangi
yekkA lumakkAtha cUrkkoth tharintha – sinavElA
thacchA mayiRchEva lAkkip piLantha
siththA kuRappAvai thAtkut padinthu
sakkA kiyappEdai yAtkup pukunthu – maNamAkith
thappA malippUrva mERkuth tharangaL
theRkA kumippAril keerththik kisaintha
thacchUr vadakkAku mArkkath thamarntha – perumALE.
English Easy Version
acchAy iRukku ANi kAttik kadaintha
seppu Ar mulaik kOdu neetti sarangaLaip
pOl vizhik kUrmai nOkkik kuzhainthu – uRavAdi
aththAn enakku Asai kUttith thayanga
vaiththAy enap pEsi mUkkaic choRinthu
akkAl orukkAlam EkkatRu irunthir – i(l)lai Asai
vaicchAy eduppAna pEcchukku idangaL
oppu Ar unakku eedu pArkkil kadampan
mattO enap pArin mUrkkaththanangaL – athanAlE
maippAku enak kURi veettil koNarnthu
pulpAyalil kAlam veetRuk kalanthu
vaippAr thamakku AsaiyAl piththu aLainthu – thirivEnO
ecchAy maruL pAdu mERpattu iruntha
picchu Asarukku Othi kOttaikku ilanga
mikkA ninaippOrkaL veekkil porunthi – nilaiyAyE
ettAm ezhuththai EzhaiyERkup pakarntha
muththA valuppAna pOrkkuL thodangi
ekkAlum makkAtha cUrk koththu arintha – sinavElA
thacchA mayil sEval Akkip piLantha
siththA kuRappAvai thAtkuL padinthu
sakkAki appEdaiyAtkup pukunthu – maNamAki
thappAmal ip pUrva mERkuth tharangaL
theRkAkum ippAril keerththikku isaintha
ThacchUr vadakkAku(m) mArkkaththu amarntha – perumALE.