திருப்புகழ் 733 பாவ நாரிகள் (திருக்கோவலூர்)

Thiruppugal 733 Pavanarigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானன தானன, தான தானன தானன
தான தானன தானன – தனதான

பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
பாவை யாரிள நீரன – முலையாலும்

பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
பார காரன வார்குழ – லதனாலுஞ்

சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித
சாத மூரலி தாமதி – முகமாலுஞ்

சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
சார மாயதி லேயுற – லொழிவேனோ

ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
யாதி காணரி தாகிய – பரமேச

ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
னாதி தேவர்க ளியாவர்கள் – பணிபாத

கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி
கோடி யாகம மாவொலி – மிகவீறும்

கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தானன தானன, தான தானன தானன
தான தானன தானன – தனதான

பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ
பாவையார் இள நீர் அ(ன்)ன – முலையாலும்

பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மாமணியார் குழை
பார கார் அ(ன்)ன வார் குழல் – அதனாலும்

சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால்
இத சாத மூரல் இதா மதி – முகமாலும்

சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு
சாரமாய் அதிலே உறல் – ஒழிவேனோ

ஆவ ஆர்வன நான் மறை ஆதி மூல பரா அரி
ஆதி காண் அரிதாகிய – பரம ஈச

ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர
அனாதி தேவர்கள் இயாவர்கள் – பணி பாத

கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி
கோடி ஆகம மா ஒலி – மிக வீறும்

கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத
கோதை யானையினோடு அமர் – பெருமாளே

English

pAva nArikaL mAmada mAthar veeNika LANava
pAvai yAriLa neerana – mulaiyAlum

pArvai yAmiku kUrayi lAlu mAmaNi yArkuzhai
pAra kArana vArkuzha – lathanAlum

sAva thAravi thAramu thArtha rAvitha zhAlitha
sAtha mUrali thAmathi – mukamAlum

sArva thAvadi yEnidar veeRa mAlaRi vEmiku
sAra mAyathi lEyuRa – lozhivEnO

Ava Arvana nAnmaRai yAthi mUla parAvari
yAthi kANari thAkiya – paramEsa

Athi yAraruL mAmuru kEsa mAlmaru kEsura
nAthi thEvarka LiyAvarkaL – paNipAtha

kOva thAmaRai yOrmaRai yOthu mOthamvi zhAvoli
kOdi yAkama mAvoli – mikaveeRum

kOvai mAnakar mEviya veera vElayi lAyutha
kOthai yAnaiyi nOdamar – perumALE.

English Easy Version

pAva nArikaL mA mada mAthar veeNikaL ANava
pAvaiyAr iLa neer a(n)na – mulaiyAlum

pArvaiyAm miku kUr ayilAlum mAmaNiyAr kuzhai
pAra kAr a(n)na vAr kuzhal – athanAlum

sAvathu Ara vithAram amuthu ArtharA ithazhAl
itha sAtha mUral ithA mathi – mukamAlum

sArvathA adiyEn idar veeRa mAl aRivE miku
sAramAy athilE uRal – ozhivEnO

Ava Arvana nAn maRai Athi mUla parA ari
Athi kAN arithAkiya – parama eesa

AthiyAr aruL mA murukEsa mAl marukEsura
Athi thEvarkaL iyAvarkaL – paNi pAtha

kO athA maRaiyOr maRai Othum Otham vizhA oli
kOdi Akama mA oli – mika veeRum

kOvai mA nakar mEviya veera vEl ayil Ayutha
kOthai yAnaiyinOdu amar – perumALE.