திருப்புகழ் 734 ஆறும் ஆறும் (தேவனூர்)

Thiruppugal 734 Arumarum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த – தனதான

ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் – அறுநாலும்


ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆரணாக மங்க டந்த – கலையான

ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி – யொருதானாய்

யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று – பெறுவேனோ

மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட – விததாரை

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு – பகுவாய

சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் – புனைவோனே

தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த – தனதான

ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் – அறுநாலும்

ஆறுமாய சஞ்சலஞ்கள் வேறதா விளங்குகின்ற
ஆரணாகமங் கடந்த – கலையான

ஈறு கூறரும் பெருஞ்சுவாமியாய் இருந்த நன்றி
ஏது வேறு இயம்பலின்றி – ஒருதானாய்

யாவுமாய் மனங்கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி
யான் அவா அடங்க என்று – பெறுவேனோ

மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெகுண்ட சண்ட – விததாரை

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளங்கொழுந்து
வால சோமன் நஞ்சு பொங்கு – பகுவாய

சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசிகா கடம்பு அலங்கல் – புனைவோனே

தேவர் யாவரும் தி ரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
தேவ னூர்விளங்க வந்த – பெருமாளே.

English

ARum ARum anjum anjum ARum ARum anjum anjum
ARum ARum anjum anjum – aRu nAlum

ARum Aya sancha langaL vERadhA viLangu kindra
AraN Agamang kadandha – kalaiyAna

eeRu kURarum perum suvAmi Ayirundha nandri
yEdhu vERiyambal indri – oruthAnAy

yAvumAy manang kadandha mOna veedadaindh orungi
yAn avA adanga endru – peRuvEnO

mARu kURi vandhedirndha sUrar sEnai manga vanga
vAri mEl veguNda chanda – vidhathArai

vAgai vEla kondrai thumbai mAlai kUviLang kozhundhu
vAla sOma nanju pongu – paguvAya

seeRu mAsuNang karandhai ARu vENi koNda nambar
dhEsikA kadamba langal – punaivOnE

dhEvar yAvarun thiraNdu pArin meedhu vandhi Rainju
dhEvanUr viLanga vandha – perumALE.

English Easy Version

ARum ARum anjum anjum ARum ARum anjum anjum
ARum ARum anjum anjum – aRu nAlum

ARum Aya sancha langaL vERadhA viLangu kindra
AraN Agamang kadandha – kalaiyAna

eeRu kURarum perum suvAmi Ayirundha nandri
yEdhu vERiyambal indri – oruthAnAy

yAvumAymanang kadandha mOna veedadaindhu
orungi yAn avA adanga endru – peRuvEnO

mARu kURi vandhedirndha sUrar sEnai manga vanga
vAri mEl veguNda chanda – vidhathArai

vAgai vEla kondrai thumbai mAlai kUviLang kozhundhu
vAla sOman nanju pongu – paguvAya

seeRu mAsuNam karandhai ARu vENi koNda nambar
dhEsikA kadamba langal – punaivOnE

dhEvar yAvarun thiraNdu pArin meedhu vandhi Rainju
dhEvanUr viLanga vandha – perumALE.