Thiruppugal 736 Kanonadhadhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன – தந்ததான
காணொ ணாதது உருவோ டருவது
பேசொ ணாதது உரையே தருவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது – பஞ்சபூதக்
காய பாசம தனிலே யுறைவது
மாய மாயுட லறியா வகையது
காய மானவ ரெதிரே யவரென – வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
மாய னாரய னறியா வகையது
பேத பேதமொ டுலகாய் வளர்வது – விந்துநாதப்
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாயருள் நிறைவாய் விளைவது – ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
நூறி யேயுயிர் நமனீ கொளுவென
வேல்க டாவிய கரனே யுமைமுலை – யுண்டகோவே
வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யேகுடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர்கு – றிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
சேர நாடிய திருடா வருடரு – கந்தவேளே
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
ஞான யோகிக ளுளமே யுறைதரு
தேவ னூர்வரு குமரா வமரர்கள் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன – தந்ததான
காணொணாதது உருவோ டருவது
பேசொ ணாதது உரையே தருவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது – பஞ்சபூதக்
காய பாசம தனிலே உறைவது
மாய மாயுட லறியா வகையது
காய மானவ ரெதிரே யவரென – வந்துபேசிப்
பேணொணாதது வெளியே யொளியது
மாயனார் அயன் அறியா வகையது
பேத அபேதமொடு உலகாய் வளர்வது – விந்துநாதப்
பேருமாய் கலை யறிவாய் துரிய
அதீதமானது வினையேன் முடிதவ
பேறு மாய் அருள் நிறைவாய் விளைவது – ஒன்றுநீயே
வீணொணாதென அமையாத அசுரரை
நூறியே உயிர் நமனீ கொளுவென
வேல்க டாவிய கரனே உமைமுலையுண்ட – கோவே
வேத நான்முக மறையோனொடும்
விளையாடியே குடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர் – குறிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மேல் அரிவையை
மேவியே மயல்கொள லீலைகள்செய்து
சேர நாடிய திருடா அருள் தரு – கந்தவேளே
சேரொணாவகை வெளியே திரியும்
மெய்ஞ்ஞான யோகிகளுளமே உறைதரு
தேவ னூர்வரு குமரா அமரர்கள் – தம்பிரானே.
English
kANo NAdhadhu uruvO daruvadhu
pEso NAdhadhu uraiyE tharuvadhu
kANu nAnmaRai mudivAy niRaivadhu – panchabUtha
kAya pAsama dhanilE uRaivadhu
mAyamAy udal aRiyA vagai adhu
kAya mAnavar edhirE avarena – vandhu pEsi
pENo NAdhadhu veLiyE oLiyadhu
mAyanAr ayan aRiyA vagai adhu
bEdha bEdhmod ulagAy vaLarvadhu – vindhunAdha
pEru mAy kalai aRivAy thuriya
atheetha mAnadhu vinaiyEn mudi thava
pERu mAy aruL niRaivAy viLaivadhu – ondru neeyE
veeNoNA dhena amaiyAdh asurarai
nURiyE uyir namanee koLuvena
vEl kadAviya karanE umai mulai – uNda kOvE
vEdha nAnmuka maRaiyOn odum viLai
yAdiyE kudumiyilE karamodu
veeRa mOdhina maRavA kuRavar – kuRinjiyUdE
sENoNAyidum idhaNmEl arivaiyai
mEviyE mayal koLa leelaigaL seydhu
sEra nAdiya thirudA aruLtharu – kandhavELE
sEroNA vagai veLiyE thiriyu mey
nyAna yOgigaL uLamEy uRaitharu
dhevanUr varu kumarA amarargaL – thambirAnE.
English Easy Version
kANo NAdhadhu uruvO daruvadhu
pEso NAdhadhu uraiyE tharuvadhu
kANu nAnmaRai mudivAy niRaivadhu – panchabUtha
kAya pAsama dhanilE uRaivadhu
mAyamAy udal aRiyA vagai adhu
kAya mAnavar edhirE avarena – vandhu pEsi
pENo NAdhadhu veLiyE oLiyadhu
mAyanAr ayan aRiyA vagai adhu
bEdha bEdhmod ulagAy vaLarvadhu – vindhunAdha
pEru mAy kalai aRivAy thuriya
atheetha mAnadhu vinaiyEn mudi thava
pERu mAy aruL niRaivAy viLaivadhu – ondru neeyE
veeNoNA dhena amaiyAdh asurarai
nURiyE uyir namanee koLuvena
vEl kadAviya karanE umai mulai – uNda kOvE
vEdha nAnmuka maRaiyOn odum
viLaiyAdiyE kudumiyilE karamodu
veeRa mOdhina maRavA kuRavar – kuRinjiyUdE
sENoNAyidum idhaNmEl arivaiyai
mEviyE mayal koLa leelaigaL seydhu
sEra nAdiya thirudA aruLtharu – kandhavELE
sEroNA vagai veLiyE thiriyu
meynyAna yOgigal uLamEy uRaitharu
dhevanUr varu kumarA amarargaL – thambirAnE