திருப்புகழ் 737 பரவுவரிக் கயல் (திருவதிகை)

Thiruppugal 737 Paravuvarikkayal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் – தனதான

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் – தமுதூறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் – பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் க்ருபைவிளைவித் – துருகாமுன்

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் – தருள்வாயே

கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் – குமரேசா

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் – புலவோனே

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் – திரைமோதித்

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் – தனதான

பரவு வரிக் கயல் குவியக் குயில் கிளி ஒத்து உரை பதற
பவள நிறத்து அதரம் விளைத்த – அமுது ஊறல்

பருகி நிறத் தரளம் அணிக் களப முலைக் குவடு அசைய
படை மதனக் கலை அடவிப் – பொதுமாதர்

சொருகு மலர்க்குழல் சரியத் தளர்வுறு சிற்றிடை துவள
துகில் அகல க்ருபை விளைவித்து – உருகா முன்

சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இத மதுரக் கலவி தனில்
சுழலும் மனக் கவலை ஒழித்து – அருள்வாயே

கருகு நிறத்து அசுரன் முடித் தலை ஒரு பத்து அற முடுகிக்
கணை தொடும் அச்சுதன் மருகக் – குமரேசா

கயிலை மலைக் கிழவன் இடக் குமரி விருப்பொடு கருதக்
கவி நிறையப் பெறும் வரிசைப் – புலவோனே

திரள் கமுகின் தலை இடறிப் பல கதலிக் குலை சிதறிச்
செறியும் வயல் கதிர் அலையத் – திரை மோதி

திமிதிமி எனப் பறை அறையப் பெருகு புனல் கெடில நதித்
திருவதிகைப் பதி முருகப் – பெருமாளே

English

paravuvarik kayalkuviyak kuyilkiLiyoth thuraipathaRap
pavaLaniRath thatharamviLaith – thamuthURal

parukiniRath tharaLamaNik kaLapamulaik kuvadasaiyap
padaimathanak kalaiyadavip – pothumAthar

sorukumalark kuzhalsariyath thaLarvuRusit RidaithuvaLath
thukilakalak krupaiviLaivith – thurukAmun

sorimalarmat talaraNaipuk kithamathurak kalavithaniR
chuzhalumanak kavalaiyozhith – tharuLvAyE

karukuniRath thasuranmudith thalaiyorupath thaRamudukik
kaNaithodumac chuthanmarukak – kumarEsA


kayilaimalaik kizhavanidak kumarivirup podukaruthak
kaviniRaiyap peRumvarisaip – pulavOnE

thiraLkamukit RalaiyidaRip palakathalik kulaisithaRic
cheRiyumvayaR kathiralaiyath – thiraimOthith

thimithimenap paRaiyaRaiyap perukupunaR kedilanathith
thiruvathikaip pathimurukap – perumALE.

English Easy Version

paravu varik kayal kuviyak kuyil kiLi oththu urai pathaRa
pavaLa niRaththu atharam viLaiththa – amuthu URal

paruki niRath tharaLam aNik kaLapa mulaik kuvadu asaiya
padai mathanak kalai adavip – pothumAthar

soruku malarkkuzhal sariyath thaLarvuRu sitRidai thuvaLa
thukil akala krupai viLaiviththu – urukA mun

sori malar mattu alar aNai pukku itha mathurak kalavi thanil
suzhalum manak kavalai ozhiththu – aruLvAyE

karuku niRaththu asuran mudith thalai oru paththu aRa mudukik
kaNai thodum acchuthan marukak – kumarEsA

kayilai malaik kizhavan idak kumari viruppodu karuthak
kavi niRaiyap peRum varisaip – pulavOnE

thiraL kamukin thalai idaRip pala kathalik kulai sithaRic
cheRiyum vayal kathir alaiyath – thirai mOthi

thimithimi enap paRai aRaiyap peruku punal kedila nathith
thiruvathikaip pathi murukap – perumALE