Thiruppugal 738 Vidamumvelana
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன – தனதான
விடமும் வேலன மலரன விழிகளு
மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
விரகி னாலெழு மிருதன வகைகளு – மிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
வினையு மாவியு முடனிரு வலையிடை
வெளியி லேபட விசிறிய விஷமிக – ளுடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
இனிமை போலெழு பிறவியெ னுவரியி
னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி – லிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
ககன பூபதி யிடர்கெட அருளிய
இறைநி னாறிரு புயமென வுரைசெய – அருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொ
டரிய மாமணி முடியொளி ரொருபது
படியி லேவிழ வொருகணை தொடுபவ – ரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்
பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
பரவு பால்கட லரவணை துயில்பவர் – மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியை
அரக ராவென அலகைகள் பலியுண
அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு – மயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
அதிகை மாநகர் மருவிய சசிமகள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன – தனதான
விடமும் வேல் அ(ன்)ன மலர் அ(ன்)ன விழிகளும்
இரதமே தரும் அமுது எனும் மொழிகளும்
விரகினால் எழும் இரு தன வகைகளும் – இதம் ஆடி
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர்
வினையும் ஆவியும் உடன் இரு வலை இடை
வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் – மேவா
இடர் உறாது உனை நினைபவர் துணை கொள்ள
இனிமை போல் எழு பிறவி எனும் உவரியின்
இடை கெடாது இனி இரு வினை இழிவினில் – அழியாதே
இசையில் நாள் தொறும் இமையவர் முநிவர்கள்
ககன பூபதி இடர் கெட அருளிய
இறை நின் ஆறிரு புயம் என உரை செய – அருள்வாயே
படரும் மார்பினில் இருபது புயம் அதொடு
அரிய மாமணி முடி ஒளிர் ஒரு பது
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் – இடம் ஆராய்
பரவை ஊடு எரி பகழியை விடுபவர்
பரவுவார் வினை கெட அருள் உதவியே
பரவு பால் கடல் அரவு அணை துயில்பவர் – மருகோனே
அடரவே வரும் அசுரர்கள் குருதியை
அரகரா என அலகைகள் பலி உண்ண
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு – மயில் வீரா
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு
கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த
அதிகை மா நகர் மருவிய சசி மகள் – பெருமாளே
English
vidamum vElana malarana vizhikaLu
miratha mEtharu mamuthenu mozhikaLum
viraki nAlezhu miruthana vakaikaLu – mithamAdi
mikavu mANmaiyu mezhinala mudaiyavar
vinaiyu mAviyu mudaniru valaiyidai
veLiyi lEpada visiRiya vishamika – LudanmEvA
idaru RAthunai ninaipavar thuNaikoLa
inimai pOlezhu piRaviye nuvariyi
nidaike dAthini yiruvinai yizhivini – lizhiyAthE
isaiyi nAdoRu mimaiyavar munivarkaL
kakana pUpathi yidarkeda aruLiya
iRaini nARiru puyamena vuraiseya – aruLvAyE
padaru mArpini lirupathu puyamatho
dariya mAmaNi mudiyoLi rorupathu
padiyi lEvizha vorukaNai thodupava – ridamArAy
paravai yUderi pakazhiyai vidupavar
paravu vArvinai kedAru Luthaviye
paravu pAlkada laravaNai thuyilpavar – marukOnE
adara vEvaru masurarkaL kuruthiyai
araka rAvena alakaikaL paliyuNa
alaiyum vElaiyum alaRida ethirporu – mayilveerA
amara rAthiya ridarpada adartharu
kodiya thAnavar thiripura meriseytha
athikai mAnakar maruviya sasimakaL – perumALE.
English Easy Version
vidamum vEl a(n)na malar a(n)na vizhikaLum
irathamE tharum amuthu enum mozhikaLum
virakinAl ezhum iru thana vakaikaLum – itham Adi
mikavum ANmaiyum ezhil nalam udaiyavar
vinaiyum Aviyum udan iru valai idai
veLiyilE pada visiRiya vishamikaLudan – mEvA
idar uRAthu unai ninaipavar thuNai koLLa
inimai pOl ezhu piRavi enum uvariyin
idai kedAthu ini iru vinai izhivinil – azhiyAthE
isaiyil nAL thoRum imaiyavar munivarkaL
kakana pUpathi idar keda aruLiya
iRai nin ARiru puyam ena urai seya – aruLvAyE
padarum mArpinil irupathu puyam athodu
ariya mAmaNi mudi eLir oru pathu
padiyilE vizha oru kaNai thodupavar – idam ArAy
paravai Udu eri pakazhiyai vidupavar
paravuvAr vinai keda aruL uthaviyE
paravu pAl kadal aravu aNai thuyilpavar – marukOnE
adaravE varum asurarkaL kuruthiyai
arakarA ena alakaikaL pali uNNa
alaiyum vElaiyum alaRida ethir poru – mayil veerA
amarar Athiyar idar pada adar tharu
kodiya thAnavar thiripuram eri seytha
athikai mA nakar maruviya sasi makaL – perumALE.