Thiruppugazh 740 ariyayanaRiyAdhavar
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா – தனதான
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே – வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் – பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே – வியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா – றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் – வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் – விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா – தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா – தனதான
அரியயன் அறியாதவர் எரி புர
மூணதுபுக நகை – ஏவியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதி
சீறழலையும் மழுநேர் – பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியேவிய – நாதர்
மனமகிழ் குமரா என உனது இருதாள்
மலரடி தொழுமாறு – அருள்வாயே
அருவரை யிருகூ றிட ஒருமயில்மேல்
அவனியை வலமாய் – வருவோனே
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் – விடுவோனே
வரிசையொடு ஒருமா தினைதரு வனமே
மருவி யொர் குறமாது – அணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் – பெருமாளே.
English
ariyayan aRiyA dhavar eripuramUN
adhupuga nagai yEviya – nAthar
avirsadai misaiyOr vanithaiyar pathi seeR
azhalaiyu mazhu nEr – pidinAthar
varai magaLoru kUR udaiyavar madhanA
gamum vizha vizhi – yEviya nAthar
manamagizh kumarA enavuna dhiru thAL
malaradi thozhumAR – aruLvAyE
aruvarai irukURida oru mayilmEl
avaniyai valamAy – varuvOnE
amarargaL igalneed asurargaL siramEl
ayil thanai visaiyAy – viduvOnE
varisaiyod orumA thinai tharu vanamE
maruviyor kuRa mA – dhaNai vEdA
malaigaLil magizhvAy maruvinal vadukUr
varuthava munivOr – perumALE.
English Easy Version
ariyayan ariyA dhavar eripuramUN
adhupuga nagai – yEviya nAthar
avirsadai misaiyOr vanithaiyar pathi seeR
azhalaiyu mazhu nEr – pidinAthar
varai magaLoru kUR udaiyavar madhanA
gamum vizha vizhi – yEviya nAthar
manamagizh kumarA enavuna dhiru thAL
malaradi thozhumAR – aruLvAyE
aruvarai irukURida oru mayilmEl
avaniyai valamAy – varuvOnE
amarargaL igalneed asurargaL siramEl
ayil thanai visaiyAy – viduvOnE
varisaiyod orumA thinai tharu vanamE
maruviyor kuRa mA – dhaNai vEdA
malaigaLil magizhvAy maruvinal vadukUr
varuthava munivOr – perumALE.