திருப்புகழ் 741 ஆரத்தன பார (திருத்துறையூர்)

Thiruppugal 741 Araththanabara

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன – தனதான

ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ – லுடைசோர

ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி – சசிநேர்வாள்

கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி – ரொளிசேருங்

கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க – ளுறவாமோ

பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி – சிவகாமி

பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் – குருநாதா

சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் – விறல்வீரா

தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன – தனதான

ஆர் அத் தன பாரத் துகில் மூடிப் பலர் காணக் கையில்
யாழ் வைத்து இசை கூர குழல் – உடை சோர

ஆகம் பனி நீர் அப் புழுகு ஓடக் குழை ஆடப் பிரை
யாசைப் படுவார் பொட்டு அணி – சசி நேர் வாள்

கூரக் கணை வேல் கண் கயல் போலச் சுழல்வார் சர்க்கரை
கோவைக் கனி வாய் பல் கதிர் – ஒளி சேரும்

கோலக் குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர
கோபச் செயலார் பித்தர்கள் – உறவு ஆமோ

பூரித் தன பாரச் சடை வேதக் குழலாள் பத்தர்கள்
பூசைக்கு இயல்வாள் பத்தினி – சிவகாமி

பூமிக் கடல் மூவர்க்கும் மு(ன்)னாள் பத்திர காளிப் புணர்
போகர்க்கு உபதேசித்து அருள் – குருநாதா

சூரக் குவடு ஆழித் தவிடாய் முட்ட சுரார் உக்கிட
சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் – விறல் வீரா

தோகைச் செயலாள் பொன் பிரகாசக் குறமான் முத்தொடு
சோதித் துறையூர் நத்திய – பெருமாளே.

English

Araththana pAraththukil mUdippalar kANakkaiyil
yAzhvaiththisai kUrakkuzha – ludaisOra

Akappani neerappuzhu kOdakkuzhai yAdappirai
yAsappadu vArpottaNi – sasinErvAL

kUrakkaNai vElkatkayal pOlacchuzhal vArsarkkarai
kOvaikkani vAypaRkathi – roLisErung

kOlakkuyi lArpattudai nUloththidai yArsiththira
kOpaccheya lArpiththarka – LuRavAmO

pUriththana pAracchadai vEthakkuzha lALpaththarkaL
pUsaikkiyal vALpaththini – sivakAmi

pUmikkadal mUvarkkumu nALpaththira kALippuNar
pOkarkkupa thEsiththaruL – gurunAthA

cUrakkuva dAzhiththavi dAymuttasu rArukkida
sOrviRkathir vElvittaruL – viRalveerA

thOkaiccheya lALpoRpira kAsakkuRa mAnmuththodu
sOthiththuRai yUrnaththiya – perumALE.

English Easy Version

Ar ath thana pArath thukil mUdip palar kANak kaiyil
yAzh vaiththu isai kUra kuzhal – udai sOra

Akam pani neer ap puzhuku Odak kuzhai Adap
piraiyAsaip paduvAr pottu aNi – sasi nEr vAL

kUrak kaNai vEl kaN kayal pOlac chuzhalvAr sarkkarai
kOvaik kani vAy pal kathir – oLi sErum

kOlak kuyilAr pattu udai nUl oththa idaiyAr siththira
kOpac cheyalAr piththarkaL – uRavu AmO

pUrith thana pAras sadai vEthak kuzhalAL paththarkaL
pUsaikku iyalvAL paththini – sivakAmi

pUmik kadal mUvarkkum mu(n)nAL paththira kALip puNar
pOkarkku upathEsiththu aruL – gurunAthA

cUrak kuvadu Azhith thavidAy mutta surAr ukkida
sOrvu il kathir vEl vittu aruL – viRal veerA

thOkaic cheyalAL pon pirakAsak kuRamAn muththodu
sOthith thuRaiyUr naththiya – perumALE