திருப்புகழ் 744 பலபல தத்துவம் (திருவெண்ணெய்நல்லூர்)

Thiruppugal 744 Palapalathaththuvam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன – தனதான

பலபல தத்துவ மதனையெ ரித்திருள்
பரையர ணப்படர் வடவன லுக்கிரை
படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள – விடமேவிப்

பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு
பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு
பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய – பரமூடே

கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
வொலிமலி யத்திரு நடனமி யற்றிய
கனகச பைக்குளி லுருகிநி றைக்கட – லதில்மூழ்கிக்

கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ
டனகச கத்துவம் வருதலு மிப்படி
கழியந லக்கினி நிறமென விற்றுட – லருள்வாயே

புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை
நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர
புலவனெ னச்சில விருதுப டைத்திடு – மிளையோனே

புனமலை யிற்குற மகளய லுற்றொரு
கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய
புளகித முற்றிபம் வரவணை யப்புணர் – மணிமார்பா

மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை
கிழவிய றச்சுக குமரித கப்பனை
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் – முருகோனே


மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன – தனதான

பலபல தத்துவம் அதனை எரித்து இருள்
பரை அரணப் படர வட அனலுக்கு இரை
பட நடநச் சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள – இடம் மேவி

பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு
பருதி வழிப் படவிடல் ககனத்தொடு
பவுரி கொ(ள்)ளச் சிவமயம் என முற்றிய – பரம் ஊடே

கலகல எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத
ஒலி மலியத் திரு நடனம் இயற்றிய
கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல் – அதில் மூழ்கி

கவுரி மின்னல் சடை அரனொடு நித்தமொடு
அனக சகத்துவம் வருதலும் இப்படி
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் – அருள்வாயே

புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை
நிரையில் கழுக்களில் உற விடு சித்திர
புலவன் எனச் சில விருது படைத்திடும் – இளையோனே

புன மலையில் குற மகள் அயல் உற்று ஒரு
கிழவன் எனச் சுனை தனில் அவள் ஐப் புய(ம்)
புளகிதம் உற்று இபம் வர அணையப் புணர் – மணி மார்பா

மலை சிலை பற்றிய கடவுள் இடத்து உறை
கிழவி அறச் சுக குமரி தகப்பனை
மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று அருள் – முருகோனே

மகிழ் பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய
திருவெ(ண்)ணெய் நல் பதி புகழ் பெற அற்புத
மயிலின் மிசைக் கொடு திரு நடம் இட்டு உறை – பெருமாளே

English

palapala thaththuva mathanaiye riththiruL
paraiyara Nappadar vadavana lukkirai
padanada nacchudar peruveLi yiRkoLa – vidamEvip

pavanamo zhiththiru vazhiyaiya daiththoru
paruthiva zhippada vidalkaka naththodu
pavuriko Lacchiva mayamena mutRiya – paramUdE

kalakale nakkazhal paripura poRpatha
volimali yaththiru nadanami yatRiya
kanakasa paikkuLi lurukini Raikkada – lathilmUzhkik

kavurimi naRchadai yaranodu niththamo
danakasa kaththuvam varuthalu mippadi
kazhiyana lakkini niRamena vitRuda – laruLvAyE

pulaiyarpo diththaLum amaNaru daRkaLai
niraiyilka zhukkaLi luRavidu siththira
pulavane nacchila viruthupa daiththidu – miLaiyOnE

punamalai yiRkuRa makaLaya lutRoru
kizhavane nacchunai thanilava Laippuya
puLakitha mutRipam varavaNai yappuNar – maNimArpA

malaisilai patRiya kadavuLi daththuRai
kizhaviya Racchuka kumaritha kappanai
mazhukodu vettiya nimalikai petRaruL – murukOnE

makizhpeNai yiRkarai pozhilmukil sutRiya
thiruveNey naRpathi pukazhpeRa aRputha
mayilinmi saikkodu thirunada mittuRai – perumALE.

English Easy Version

palapala thaththuvam athanai eriththu iruL
parai araNap padar vada analukku irai
Pada nadanac chudar peru veLiyil ko(L)La – idam mEvi

pavanam ozhiththu iru vazhiyai adaiththu oru
paruthi vazhip padavidal kakanaththodu
pavuri ko(L)Lac chivamayam ena mutRiya – param UdE

kalakala enak kazhal paripura(m) pon patha
oli maliyath thiru nadanam iyatRiya
kanaka sapaikkuLil uruki niRaik kadal athil – mUzhki

kavuri minnal chadai aranodu niththamodu
anaka sakaththuvam varuthalum ippadi
kazhiya nalakku ini niRam en navitRu udal – aruLvAyE

pulaiyar podiththaLum amaNar udalkaLai
niraiyil kazhukkaLil uRa vidu siththira
pulavan enac chila viruthu padaiththidum – iLaiyOnE

puna malaiyil kuRa makaL ayal utRu oru
kizhavan enac chunai thanil avaL aip puya(m)
puLakitham utRu ipam vara aNaiyap puNar – maNi mArpA

malai silai patRiya kadavuL idaththu uRai
kizhavi aRas suka kumari thakappanai
mazhu ko(N)du vettiya nimalikai petRu aruL – murukOnE

makizh pe(N)Naiyil karai pozhil mukil sutRiya
thiruve(N)Ney nal pathi pukazh peRa aRputha
mayilin misaik kodu thiru nadam ittu uRai – perumALE