திருப்புகழ் 745 நிணமொடு குருதி (திருப்பாதிரிப்புலியூர்)

Thiruppugal 745 Ninamodukurudhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன – தனதான

நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு நோய்படு – முதுகாயம்

நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ – முயவோரும்

உணர்விலி செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி
உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை – வழியாமுன்

ஒருதிரு மரகத துங்க மாமிசை
யறுமுக மொளிவிட வந்து நான்மறை
யுபநிட மதனை விளங்க நீயருள் – புரிவாயே

புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொரு – பதுமாறிப்

புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு – மருகோனே

அணிதரு கயிலை நடுங்க வோரெழு
குலகிரி யடைய இடிந்து தூளெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு – முருகோனே

அமலைமு னரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன – தனதான

நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையும் எலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு நோய்படு – முதுகாயம்

நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவம் – உ(ய்)ய ஓரும்

உணர்விலி செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி
உயர்விலி யெனினுமெ னெஞ்சு தான் நினை – வழியாமுன்

ஒருதிரு மரகத துங்க மாமிசை
அறுமுகம் ஒளிவிட வந்து நான்மறை
யுபநிடம் அதனை விளங்க நீயருள் – புரிவாயே

புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொரு – பதுமாறி

புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு – மருகோனே

அணிதரு கயிலை நடுங்க ஓரெழு
குலகிரி யடைய இடிந்து தூளெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு – முருகோனே

அமலைமுன் அரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர் – பெருமாளே

English

niNamodu kuruthi narampu mARiya
thasaikudal midaiyu melumpu thOlivai
nirainirai seRiyu mudampu nOypadu – muthukAyam

nilainilai yuruva malanga LAvathu
navathoLai yudaiya kurampai yAmithil
nikazhtharu pozhuthil muyanRu mAdhava – muyavOrum

uNarvili sepamutha lonRu thAnili
niRaiyili muRaiyili yanpu thAnili
uyarvili yeninume nenju thAninai – vazhiyAmun

oruthiru marakatha thunga mAmisai
yaRumuka moLivida vanthu nAnmaRai
yupanida mathanai viLanga neeyaruL – purivAyE

puNariyil viravi yezhuntha gnAyiRu
vilakiya purisai yilangai vAzhpathi
polamaNi makuda sirangaL thAmoru – pathumARip

puviyidai yuruLa muninthu kUrkaNai
yuRusilai vaLaiya valinthu nAdiya
puyalathi viRalari viNdu mAlthiru – marukOnE

aNitharu kayilai nadunga vOrezhu
kulakiri yadaiya idinthu thULezha
alaiyeRi yuthathi kuzhampa vElvidu – murukOnE

amalaimu nariya thavanchey pAdala
vaLanakar maruvi yamarntha thEsika
aRumuka kuRamaka Lanpa mAdhavar – perumALE.

English Easy Version

niNamodu kuruthi narampu mARiya
Thasai kudal midaiyum elumpu thOlivai
nirainirai seRiyu mudampu nOypadu – muthukAyam

nilainilai yuruva malanga LAvathu
navathoLai yudaiya kurampai yAmithil
nikazhtharu pozhuthil muyanRu mAdhavam – u(y)ya Orum

uNarvili sepamutha lonRu thAnili
niRaiyili muRaiyili yanpu thAnili
uyarvili yeninume nenju thAn ninai – vazhiyAmun

oruthiru marakatha thungka mAmisai
aRumukam oLivida vanthu nAnmaRai
yupanidam athanai viLanga neeyaruL – purivAyE

puNariyil viravi yezhuntha gnAyiRu
vilakiya purisai yilangai vAzhpathi
polamaNi makuda sirangaL thAmorupathu – mARi

puviyidai yuruLa muninthu kUrkaNai
yuRusilai vaLaiya valinthu nAdiya
puyalathi viRalari viNdu mAlthiru – marukOnE

aNitharu kayilai nadunga Orezhu
kulakiri yadaiya idinthu thULezha
alaiyeRi yuthathi kuzhampa vElvidu – murukOnE

amalaimun ariya thavanchey pAdala
vaLanakar maruvi yamarntha thEsika
aRumuka kuRamaka Lanpa mAthavar – perumALE.