Thiruppugal 746 Madhikkunerenum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன – தந்ததான
மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
மணத்த வார்குழல் மாமாத ராரிரு – கொங்கைமூழ்கி
மதித்த பூதர மாமாம னோலயர்
செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் – பண்டநாயேன்
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
படைக்குள் மேவிய சீராவொ டேகலை
பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் – தங்குகாதும்
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
படைத்த வாகையு நாடாது பாழில்ம – யங்கலாமோ
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் – வஞ்சவேலா
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
கடித்த பூதமொ டேபாடி யாடுதல் – கண்டவீரா
குதித்து வானர மேலேறு தாறுகள்
குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் – வஞ்சிதோயுங்
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன – தந்ததான
மதிக்கு(ம்) நேர் என்னும் வாள் முகம் வான் மக(கா)
நதிக்கு மேல் வரு(ம்) சேல் என்னும் நேர் விழி
மணத்த வார் குழல் மா மாதரார் இரு – கொங்கை மூழ்கி
மதித்த பூதரம் ஆம் ஆம் மனோலயர்
செருக்கி மேல் விழ நாள் தோறுமே
மிக வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் – பண்ட நாயேன்
பதித்த நூபுர சீர் பாத மா மலர்
படைக்குள் மேவிய சீரா ஓடே கலை
பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் – தங்கு காதும்
பணிக் கலாபமும் வேலோடு சேவலும்
வடிக் கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை
படைத்த வாகையும் நாடாது பாழில் – மயங்கலாமோ
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை
நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் – வஞ்ச வேலா
களித்த பேய் கணம் மா காளி கூளிகள்
திரள் பிரேதம் மேலே மேவி மூளைகள்
கடித்த பூதமொடே பாடி ஆடுதல் – கண்ட வீரா
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள்
குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள்குலைக்கு
மேல் விழவே ஏர் ஏறு போகமும் – வஞ்சி தோயும்
குளத்தில் ஊறிய தேன் ஊறல் மா துகள்
குடித்து உலாவியெ சேலோடு மாணி கொள்
குழிக்குள் மேவிய வானோர்களே தொழு(ம்) – தம்பிரானே
English
mathikku nErenum vANmUkam vAnmaka
nathikku mElvaru sElEnu nErvizhi
maNaththa vArkuzhal mAmAtha rAriru – kongaimUzhki
mathiththa pUthara mAmAma nOlayar
serukki mElvizha nAdORu mEmika
vadiththa thEnmozhi vAyURa lEnukar – paNdanAyEn
pathiththa nUpura seerpAtha mAmalar
padaikkuL mEviya seerAvo dEkalai
paNaiththa thOLkaLo deerARu thOdukaL – thangukAthum
paNikka lApamum vElOdu sEvalum
vadikkoL cUlamum vALveesu neeLsilai
padaiththa vAkaiyu nAdAthu pAzhilma – yangalAmO
kathiththu mElvaru mAcUrar cUzhpadai
noRukki mAvuyar thErOdu mEkari
kalakki yUrpathi theemULa vEvidum – vanjavElA
kaLiththa pEykaNa mAkALi kULikaL
thiratpi rEthame lEmEvi mULaikaL
kadiththa pUthamo dEpAdi yAduthal – kaNdaveerA
kuthiththu vAnara mElERu thARukaL
kulaiththu neeLkamu kUdAdi vAzhaikoL
kulaikku mElvizha vErERu pOkamum – vanjithOyum
kuLaththi lURiya thEnURal mAthukaL
kudiththu lAviye sElOdu mANikoL
kuzhikkuL mEviya vAnOrka LEthozhu – thambirAnE.
English Easy Version
mathikku(m) nEr ennum vAL mukam vAn maka(a)
nathikku mEl varu(m) sEl ennum nEr vizhi
maNaththa vAr kuzhal mA mAtharAr iru – kongai mUzhki
mathiththa pUtharam Am Am manOlayar
serukki mEl vizha nAL thORumE mika
vadiththa thEn mozhi vAy URalE nukar – paNda nAyEn
pathiththa nUpura seer pAtha mA malar
padaikkuL mEviya seerA OdE kalai
paNaiththa thOLkaLodu eerARu thOdukaL – thangu kAthum
paNik kalApamum vElOdu sEvalum
vadik koL cUlamum vAL veesu neeL silai
padaiththa vAkaiyum nAdAthu pAzhil – mayangalAmO
kathiththu mEl varu mA cUrar cUzh padai
noRukki mA uyar thErOdumE kari
kalakki Ur pathi thee mULavE vidum – vanja vElA
kaLiththa pEy kaNam mA kALi kULikaL
thiraL pirEtham mElE mEvi mULaikaL
kadiththa pUthamodE pAdi Aduthal – kaNda veerA
kuthiththu vAnaram mEl ERu thARukaL
kulaiththu neeL kamuku UdAdi vAzhai
koLkulaikku mEl vizhavE Er ERu pOkamum – vanji thOyum
kuLaththil URiya thEn URal mA thukaL
kudiththu ulAviye sElOdu mANi koL
kuzhikkuL mEviya vAnOrkaLE thozhu(m) – thambirAnE.