திருப்புகழ் 747 சதுரத்தரை நோக்கிய (திருவேட்களம்)

Thiruppugal 747 Sadhuraththarainokkiya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன -தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக – அநுபூதி

சரணக்கழல் காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குல மீட்டிய தோளொடு – முகமாறுங்

கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புற நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும் – அடியேனைக்

கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு – மறவேனே

சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்ப்புற வேயயில் – விடுவோனே

சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி – யருள்பாலா

விதுரற்கும ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் – மருகோனே

வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன -தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழைய சிவ பாக்கிய நாடக – அநுபூதி

சரணக் கழல் காட்டியே என் ஆணவ
மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக் குலம் ஈட்டிய தோளொடு – முகம் ஆறும்

கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணைக் கடல் காட்டிய கோலமும் – அடியேனை

கனகத்தினும் நோக்கி இனிதாய்
அடியவர் முத்தமிழால் புகவே பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையும் – மறவேனே

சிதறத் தரை நால்திசை பூதர(ம்)
நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் – விடுவோனே

சிவ பத்தினி கூற்றினை மோதிய
பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி – அருள்பாலா

விதுரற்கும் அராக் கொடி யானையும்
விகடத் துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் – மருகோனே

வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய்த் திருவேட்களம் மேவிய – பெருமாளே

English

chathurath tharai nOkkiya pUvodu
kadhiroth thida Akkiya gOLakai
thazhaiya siva bAkkiya nAtaka – anubUthi

charaNak kazhal katti enANava
malamatrida vAttiya ARiru
sayilakkula meettiya thOLodu – mukam ARung

kadhir sutruga nOkkiya pAdhamu
mayiliR puRa nOkkiya nAmena
karuNaik kadal kAttiya kOlamum – adiyEnai

kanakath thinu nOk kinidhAy adi
yavar muth thamizhAR pugavE para
gathi petrida nOkkiya pArvaiyu – maRavEnE

sidhaRath tharai nAtRisai bUdhara
neriyap paRai mUrkkargaL mA mudi
sidhaRak kadalArp puRavE ayil – viduvOnE

sivapaththini kUtrinai mOdhiya
padha saththini mUththa vinAyagi
jegam ippadi thotriya pArvathi – aruL bAlA

vidhuraRkum arAkkodi yAnaiyum
vikatath uRvAkkiya mAdhavan
vijaiyaRk uyar thErp pari Urbavan – marugOnE

veLiyet isai sUrp porudhAdiya
kodi kaikkodu keerthi ulAviya
viRalmeyth thiruvEtkaLa mEviya – perumALE.

English Easy Version

chathurath tharai nOkkiya pUvodu
kadhiroth thida Akkiya gOLakai
Thazhaiya siva bAkkiya nAtaka – anubUthi

charaNak kazhal katti enANava
malamatrida vAttiya ARiru
sayilakkula meettiya thOLodu – mukam ARung

kadhir sutruga nOkkiya pAdhamu
mayiliR puRa nOkkiya nAmena
karuNaik kadal kAttiya kOlamum – adiyEnai

kanakath thinu nOk kinidhAy
adiyavar muth thamizhAR pugavE para
gathi petrida nOkkiya pArvaiyu – maRavEnE

sidhaRath tharai nAtRisai bUdhara
Neriya paRai mUrkkargaL mA mudi
sidhaRa kadalArp puRavE ayil – viduvOnE

sivapaththini kUtrinai mOdhiya
padha saththini mUththa vinAyagi
jegam ippadi thotriya pArvathi – aruL bAlA

vidhuraRkum arAkkodi yAnaiyum
vikatath uRvAkkiya mAdhavan
vijaiyaRk uyar thErp pari Urbavan – marugOnE

veLiyet isai sUrp porudhAdiya
kodi kaikkodu keerthi ulAviya
viRalmeyth thiruvEtkaLa mEviya – perumALE