திருப்புகழ் 750 குடத் தாமரையாம் (விருத்தாசலம்)

Thiruppugal 750 Kudaththamaraiyam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன – தனதான

குடத்தாமரை யாமென வேயிரு
தனத்தார்மதி வாணுத லாரிருள்
குழற்காடின மாமுகில் போல்முது – கலைமோதக்

குலக்கார்மயி லாமென வேகயல்
விழித்தார்கர மேல்கொடு மாமுலை
குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் – குரலோசை

படித்தார்மயி லாமென வேநடை
நெளித்தார்பல காமுகர் வார்கலை
பழிப்பாரவ ராசையை மேல்கொடு – விலைமாதர்

படிக்கார்மின லாமென வேநகை
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
பறிப்பார்பழி காரிகள் நாரிக – ளுறவாமோ

அடைத்தார்கட லோர்வலி ராவண
குலத்தோடரி யோர்சர னார்சின
மழித்தார்முகி லேய்நிற ராகவர் – மருகோனே

அறுத்தாரய னார்தலை யேபுர
மெரித்தாரதி லேபுல னாருயி
ரளித்தாருடல் பாதியி லேயுமை – அருள்பாலா

விடத்தாரசு ரார்பதி வேரற
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை – மிடிதீர

விழித்தாமரை போலழ காகுற
மகட்கானவ ணாஎன தாயுறை
விருத்தாசலம் வாழ்மயில் வாகன – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன – தனதான

குடத் தாமரையாம் எனவே இரு
தனத்தார் மதி வாள் நுதலார் இருள்
குழல் காடின மா முகில் போல் முதுகு – அலைமோத

குலக் கார் மயிலாம் எனவே கயல்
விழித் தார் கரம் மேல் கொடு மா முலை
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் – குரலோசை

படித்தார் மயிலாம் எனவே நடை
நெளித்தார் பல காமுகர் வார் கலை
பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு – விலைமாதர்

படிக் கார் மி(ன்)னலாம் எனவே நகை
புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள்
பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் – உறவாமோ

அடைத்தார் கடல் ஓர் வலி ராவண
குலத்தோடு அரி ஓர் சரனார் சினம்
அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் – மருகோனே

அறுத்தார் அயனார் தலையே புரம்
எரித்தார் அதிலே புலனார் உயிர்
அளித்தார் உடல் பாதியிலே உமை – அருள்பாலா

விடத்தார் அசுரார் பதி வேர் அற
அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம்
விளைத்தாய் குடி வாழ அமரோர் சிறை – மிடி தீர

விழித் தாமரை போல் அழகா குற
மகட்கு ஆன வ(ண்)ணா என(து) தாய் உறை
விருத்தாசலம் வாழ் மயில் வாகன – பெருமாளே

English

kudaththAmarai yAmena vEyiru
thanaththArmathi vANutha lAriruL
kuzhaRkAdina mAmukil pOlmuthu – kalaimOthak

kulakkArmayi lAmena vEkayal
vizhiththArkara mElkodu mAmulai
kudaththiyAzhkiLi yAmena vEkuyil – kuralOsai

padiththArmayi lAmena vEnadai
neLiththArpala kAmukar vArkalai
pazhippArava rAsaiyai mElkodu – vilaimAthar

padikkArmina lAmena vEnakai
puriththArpalar vAyithazh sErporuL
paRippArpazhi kArikaL nArika – LuRavAmO

adaiththArkada lOrvali rAvaNa
kulaththOdari yOrsara nArsina
mazhiththArmuki lEyniRa rAkavar – marukOnE

aRuththAraya nArthalai yEpura
meriththArathi lEpula nAruyi
raLiththArudal pAthiyi lEyumai – aruLbAlA

vidaththArasu rArpathi vEraRa
adiththAykathir vElkodu sEvakam
viLaiththAykudi vAzhama rOrsiRai – miditheera

vizhiththAmarai pOlazha kAkuRa
makatkAnava NAena thAyuRai
viruththAsalam vAzhmayil vAkana – perumALE.

English Easy Version

kudath thAmaraiyAm enavE iru
thanaththAr mathi vAL nuthalAr iruL
kuzhal kAdina mA mukil pOl muthuku – alaimOtha

kulak kAr mayilAm enavE kayal
vizhith thAr karam mEl kodu mA mulai
Kudaththu yAzh kiLiyAm enavE kuyil – kuralOsai

padiththAr mayilAm enavE nadai
neLiththAr pala kAmukar vAr kalai
pazhippAravar Asaiyai mElkodu – vilai mAthar

padik kAr mi(n)nalAm enavE nakai
puriththAr palar vAy ithazh sEr poruL
paRippAr pazhikArikaL nArikaL – uRavAmO

adaiththAr kadal Or vali rAvaNa
kulaththOdu ari Or saranAr sinam
azhiththAr mukil Ey niRa rAkavar – marukOnE

aRuththAr ayanAr thalaiyE puram
eriththAr athilE pulanAr uyir
aLiththAr udal pAthiyilE umai – aruLbAlA

vidaththAr asurAr pathi vEr aRa
adiththAy kathir vEl kodu sEvakam
viLaiththAy kudi vAzha amarOr siRai – midi theera

vizhith thAmarai pOl azhakA kuRa
makatku Ana va(N)NA ena(thu) thAy uRai
viruththAsalam vAzh mayil vAkana – perumALE