Thiruppugal 751 Thirumozhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன – தனதான
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய – குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட – விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை – யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு – மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென – முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு – முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை – முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன – தனதான
திருமொழி யுரைபெற அரன் உனதுழி பணி
செய முனம் அருளிய – குளவோனே
திறலுயர் மதுரையில் அமணரை உயிர்கழு
தெறிபட மறுகிட – விடுவோனே
ஒருவு அரும் உனதருள் பரிவிலர் அவர்களின்உறு
படர் உறுமெனை – யருள்வாயோ
உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு – மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென – முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு – முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை – முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறை தமிழ்
முதுகிரி வலம்வரு – பெருமாளே.
English
thirumozhi uraipeRa aranuna dhuzhi paNi
seyamuna maruLiya – kuLavOnE
thiRaluyar madhuraiyil amaNarai uyirkazhu
theRipada maRugida – viduvOnE
oruvarum unadharuL parivilar avargaLin
uRupadar uRumenai – aruLvAyO
ulaginil anaivargaL pugazhvuRa aruNaiyil
orunodi thanilvaru – mayilveerA
karuvari yuRuporu kaNaivizhi kuRamagaL
kaNinedhir tharuvena – munamAnAy
karumugil poruniRa arithiru marumaga
karuNaiyil mozhitharu – mudhalvOnE
murugalar tharuvuRai amarargaL siRaivida
muraNuRum asuranai – munivOnE
mudibavar vadivaRu suchikara muRaithamizh
mudhugiri valamvaru – perumALE.
English Easy Version
thirumozhi uraipeRa aranuna dhuzhi paNi
Seya muna maruLiya – kuLavOnE
thiRaluyar madhuraiyil amaNarai uyir
Kazhu theRipada maRugida – viduvOnE
oruvarum unadharuL parivilar avargaLin
uRupadar uRumenai – aruLvAyO
ulaginil anaivargaL pugazhvuRa aruNaiyil
orunodi thanilvaru – mayilveerA
karuvari yuRuporu kaNaivizhi kuRamagaL
kaNinedhir tharuvena – munamAnAy
karumugil poruniRa arithiru marumaga
karuNaiyil mozhitharu – mudhalvOnE
murugalar tharuvuRai amarargaL siRaivida
muraNuRum asuranai – munivOnE
mudibavar vadivaRu suchikara muRai thamizh
mudhugiri valamvaru – perumALE