Thiruppugal 752 Pasaiatraudal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த – தனதான
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் – வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி – னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று – தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப – தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று – முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி – யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் – மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர் விர்த்த கிரியுற்ற – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த – தனதான
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி
பறியக் கை சொறியப் பல் – வெளியாகி
படலைக்கு விழி கெட்ட குருடு உற்று மிக நெக்க
பழம் உற்று நரை கொக்கின் – நிறமாகி
விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு
மெலிவு உற்று விரல் பற்று – தடியோடே
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை
விடுவித்து உன் அருள் வைப்பது – ஒரு நாளே
அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில்
அடல் வஜ்ர கரன் மற்றும் – உள வானோர்
அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய்
அதுலச் சமர வெற்றி – உடையோனே
வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற
வடிவு உற்ற முகில் கிட்ணன் – மருகோனே
மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர்
வளர் விர்த்த கிரி உற்ற – பெருமாளே.
English
pasaiyatRa vudalvatRa vinaimutRi nadainetti
paRiyakkai soRiyappal – veLiyAkip
padalaikku vizhiketta kurudutRu mikanekka
pazhamutRu naraikokki – niRamAki
visaipetRu varupiththam vaLiyaikka Nilaikettu
melivutRu viralpatRu – thadiyOdE
veLiniRkum vithamutRa idarpetRa jananaththai
viduviththu naruLvaippa – thorunALE
asaivatRa nirutharkku madivutRa piriyaththi
nadalvajra karanmatRu – muLavAnOr
aLavatRa malarviddu nilamutRu maRaiyacchey
athulaccha maravetRi – yudaiyOnE
vasaiyatRu mudivatRu vaLarpatRi naLavatRa
vadivutRa mukilkitNan – marukOnE
mathuracche mozhiseppi yaruLpetRa sivapaththar
vaLar virththa kiriyutRa – perumALE.
English Easy Version
pasai atRa udal vatRa vinai mutRi nadai netti
paRiyak kai soRiyap pal – veLiyAki
padalaikku vizhi ketta kurudu utRu mika nekka
mika nekka pazham utRu narai kokkin – niRamAki
visai petRu varu piththam vaLiyaik kaN nilai kettu
melivu utRu viral patRu – thadiyOdE
veLi niRkum vitham utRa idar petRa jananaththai
Viduviththu un aruL vaippathu – oru nALE
asaivu atRa nirutharkku madi utRa piriyaththil
adal vajra karan matRum – uLa vAnOr
aLavu atRa malar vittu nilam utRu maRaiyac cey
athulac camara vetRi – udaiyOnE
vasai atRu mudivu atRu vaLar patRin aLavu atRa
vadivu utRa mukil kitNan – marukOnE
mathurac cem mozhi seppi aruL petRa siva paththar
vaLar virththa kiri utRa – perumALE