திருப்புகழ் 753 குரைகடல் உலகினில் (வேப்பூர்)

Thiruppugal 753 Kuraikadalulaginil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த – தனதான

குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்ற – குடில்பேணிக்

குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றி – யவிரோதம்

வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்கு – மநுபூதி

வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்த – ருளவேணும்

திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன் – மறையோடு

தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர – புரிவாழ

விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த – புவியேழும்

மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த – தனதான

குரைகடலுலகினில் உயிர்கொடு போந்து
கூத்தாடுகின்ற – குடில்பேணி

குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றி – அவிரோதம் வர

இரு வினையற உணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்கும் – அநுபூதி

வடிவினை உனது அழகிய திருவார்ந்த
வாக்கால் மொழிந்த – ருளவேணும்

திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன் – மறையோடு

தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர – புரிவாழ

விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த – புவியேழும்

மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர் அமர்ந்த – பெருமாளே

English

kuraikada lulakini luyirkodu pOnthu
kUththAdu kinRa – kudilpENik

kukaiyida maruviya karuvizhi mAnthar
kOttAlai yinRi – yavirOtham

varairu vinaiyaRa uNarvodu thUngu
vArkkE viLangu – manupUthi

vadivinai yunathazha kiyathiru vArntha
vAkkAlmo zhintha – ruLavENum

thiraLvarai pakamiku kurukula vEnthu
thErppAkan mainthan – maRaiyOdu

therumara nisisarar manaiviyar sErnthu
theeppAya indhra – purivAzha

virithirai yeriyezha muthaluRa vAngu
vERkAra kantha – puviyEzhum

midikeda viLaivana vaLavayal chUzhntha
vEppUra marntha – perumALE.

English Easy Version

kuraikadal ulakinil uyirkodu pOnthu
kUththAdu kinRa – kudilpENik

kukaiyida maruviya karuvizhi mAnthar
kOttAlai yinRi – yavirOtham

Vara iru vinaiyaRa uNarvodu thUngu
vArkkE viLangum – anupUthi

Vadivinai unathazhakiya thiru vArntha
vAkkAlmo zhintharuLa – vENum

thiraLvarai pakamiku kurukula vEnthu
thErppAkan mainthan – maRaiyOdu

Therumara nisisarar manaiviyar sErnthu
theeppAya indhra – purivAzha

virithirai yeriyezha muthaluRa vAngu
vERkAra kantha – puviyEzhum

midikeda viLaivana vaLavayal chUzhntha
vEppUra marntha – perumALE.