திருப்புகழ் 754 அஞ்சுவித பூதமும் (நிம்பபுரம்)

Thiruppugal 754 Anjuvidhabudhamum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான – தனதான

அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது – மறியாத

அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு – பெறுமாறு

மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி – வனமீது

வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத – மருள்வாயே

குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர – வதிரேகக்

கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற – இகல்கோப

வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை – விடுவோனே

விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான – தனதான

அஞ்சுவித பூதமும் கரண நாலும்
அந்திபகல் யாதும் – அறியாத

அந்தநடு ஆதி யொன்றுமிலதான
அந்தவொரு வீடு – பெறுமாறு

மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி – வனமீது

வந்த சரணார விந்தம் அது பாட
வண்டமிழ் விநோதம் – அருள்வாயே

குஞ்சர கலாப வஞ்சி அபிராம
குங்கும படீர – அதிரேக

கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்று தடுமாற – இகல்கோப

வெஞ்சமர சூரன் நெஞ்சு பக வீர
வென்றிவடி வேலை – விடுவோனே

விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டல மகீபர் – பெருமாளே.

English

anju vidha bUtha mungkaraNa nAlum
andhi pagal yAdhum – aRiyAdha

andha nadu vAdhi ondru miladhAna
andha oru veedu – peRumARu

manju thavazh sAral anchayila vEdar
mangai thanai nAdi – vanameedhu

vandha charaNAra vindham adhu pAda
vaNdamizh vinOdham – aruLvAyE

kunjara kalApa vanji abirAma
kungkuma pateera – adhirEka

kumbathana meedhu sendraNaiyu mArba
kundru thadu mARa – igalkOpa

vensamara sUra nenjupaga veera
vendri vadivElai – viduvOnE

vimba madhil sUzhu nimbapura vANa
viNdala mageepar – perumALE.

English Easy Version

anju vidha bUthamum karaNa nAlum
andhi pagal yAdhum – aRiyAdha

andha nadu vAdhi ondru miladhAna
andha oru veedu – peRumARu

manju thavazh sAral anchayila vEdar
mangai thanai nAdi – vanameedhu

vandha charaNAra vindham adhu pAda
vaNdamizh vinOdham – aruLvAyE

kunjara kalApa vanji abirAma
kungkuma pateera – adhirEka

kumbathana meedhu sendraNaiyu mArba
kundru thadu mARa – igalkOpa

vensamara sUra nenjupaga veera
vendri vadivElai – viduvOnE

vimba madhil sUzhu nimbapura vANa
viNdala mageepar – perumALE