திருப்புகழ் 755 நாட்டம் தங்கி (வேப்பஞ்சந்தி)

Thiruppugal 755 Nattamthangki

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாத்தந் தந்தத் தந்தத் தனனத் – தனதான

நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் – படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் – பதமீவாய்

வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் – படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் – கெதிரானோர்

கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் – பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் – தொளிர்வேலா

வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் – கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தாத்தந் தந்தத் தந்தத் தனனத் – தனதான

நாட்டம் தங்கிக் கொங்கைக் குவடில் – படியாதே
நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் – பதம் ஈவாய்

வாட்டம் கண்டு உற்று அண்டத்து அமரப் – படை மீதே
மாற்றம் தந்து பந்திச் சமருக்கு – எதிரானோர்

கூட்டம் கந்திச் சிந்திச் சிதறப் – பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணம் ஒத்த – ஒளிர் வேலா

வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு – இளையோனே
வேப்பம் சந்திக் கந்தக் குமரப் – பெருமாளே

English

nAttan thangik kongaik kuvadiR – padiyAthE
nAttun thoNdark kaNdak kamalap – pathameevAy

vAttang kaNdut RaNdath thamarap – padaimeethE
mAtRan thanthup panthic camaruk – kethirAnOr

kUttang kanthic cinthic cithaRap – poruvOnE
kUtRan panthic cinthaik kuNamoth – thoLirvElA

vEttan thonthith thanthip paranuk – kiLaiyOnE
vEppanj canthik kanthak kumarap – perumALE.

English Easy Version