திருப்புகழ் 756 வாட்டியெனை (திருக்கூடலையாற்றூர்)

Thiruppugal 756 Vattiyenai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன – தந்ததான

வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு
மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு – விஞ்சையாலே


வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு
வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் – வன்புகூரத்

தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென
சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன – தன்பிலாமல்

தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம
னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்
சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு – ளன்புதாராய்

வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை
மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் – விஞ்சையோனே


வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட – முங்கொளாயி

கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் – கந்தவேளே

கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர – தம்பிரானே.

பதம் பிரித்தது

தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன – தந்ததான

வாட்டி எனைச் சூழ்ந்த வினை ஆசைய மூ ஆசை அனல்
மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமோடு
மாட்டி எனைப் பாய்ந்து கடவோடு அ(ட்)டமோடு ஆடிவிடு – விஞ்சையாலே

வாய்த்த மலர்ச் சாந்து புழுகான ப(ன்)னீர்களோடு
காற்று வரத் தாங்குவன மார்பில் அணி ஆரமோடு
வாய்க்கும் எனப் பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் – அன்பு கூரத்

தீட்டு விழிக் காந்தி மடவார்களுடன் ஆடி வலை
பூட்டி விடப் போந்து பிணியோடு வலிவாதம் என
சேர்த்து விடப் பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது – அன்பு இலாமல்

தேட்டம் உறத் தேர்ந்தும் அமிர்து ஆம் எனவே ஏகி நமன்
ஓட்டி விடக் காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள்
சீட்டு வர க(கா)ண்டு நலி காலன் அணுகா நின் அருள் – அன்பு தாராய்

வேட்டுவரைக் காய்ந்து குற மாதை உறவாடி இருள்
நாட்டவரைச் சேந்த கதிர் வேல் கொடு அமர் ஆடி சிறை
மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் – விஞ்சையோனே

வேற்று உருவில் போந்து மதுரா புரியில் ஆடி வைகை
ஆற்றின் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம்
மேட்டை எரித்து ஆண்ட சிவ லோகன் விடை ஏறி இடமும் – கொள் ஆயி

கோட்டு முலைத் தாங்கும் இழையான இடை கோடி மதி
தோற்றம் எனப் போந்த அழகான சிவகாமி விறல்
கூற்றுவனைக் காய்ந்த அபிராமி மனது ஆர அருள் – கந்த வேளே

கூட்டு நதித் தேங்கிய வெ(ள்)ளாறு தரளாறு திகழ்
நாட்டில் உறைச் சேந்த மயிலா வ(ள்)ளி தெய்வானையொடெ
கூற்று விழத் தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர – தம்பிரானே

English

vAttiyenaic cUzhnthavinai yAsaiyamu vAsaiyanal
mUttiyulaik kAynthamazhu vAmenavi kAsamodu
mAttiyenaip pAynthukada vOdadamo dAdividu – vinjaiyAlE


vAyththamalarc chAnthupuzhu kAnapani neerkaLodu
kAtRuvarath thAnguvana mArpilaNi yAramodu
vAykkumenap pUNdazhaka thAkapavi sOdumakizh – vanpukUrath

theettuvizhik kAnthimada vArkaLuda nAdivalai
pUttividap pOnthupiNi yOduvali vAthamena
sErththuvidap pErnthuvinai mUdiyadi yEnumuna – thanpilAmal

thEttamuRath thErnthumamir thAmenave yEkinama
nOttividak kAynthuvari vEthanadai yALamaruL
seettuvarak kANdunali kAlanaNu kAninaru – LanputhArAy

vEttuvaraik kAynthukuRa mAthaiyuRa vAdiyiruL
nAttavaraic chEnthakathir vElkodama rAdisiRai
meettamarark kANdavanai vAzhkanilai yAkavaikum – vinjaiyOnE

vEtRuruviR pOnthumathu rApuriyi lAdivaikai
yAtRinmaNat RAngumazhu vALiyena thAthaipura
mEttaiyerith thANdasiva lOkanvidai yERiyida – mungoLAyi

kOttumulaith thAngumizhai yAnaidai kOdimathi
thOtRamenap pOnthAzha kAnasiva kAmiviRal
kUtRuvanaik kAynthApi rAmimana thArAruL – kanthavELE


kUttunathith thEngiyave LARuthara LARuthikazh
nAttiluRaic chEnthamayi lAvaLithey vAnaiyode
kUtRuvizhath thANdiyena thAkamathil vAzhkumara – thambirAnE.

English Easy Version

vAtti enaic cUzhntha vinai Asaiya mU Asai anal
mUtti ulai kAyntha mazhuvAm ena vikAsamOdu
mAtti enaip pAynthu kadavOdu a(d)damOdu Adividu – vinjaiyAlE

vAyththa malarc chAnthu puzhukAna pa(n)neerkaLOdu
kAtRu varath thAnguvana mArpil aNi AramOdu
vAykkum enap pUNdu azhaku athAka pavisOdu makizh – anpu kUrath

theettu vizhik kAnthi madavArkaLudan Adi valai
pUtti vidap pOnthu piNiyOdu valivAtham ena
sErththu vidap pErnthu vinai mUdi adiyEnum unathu – anpu ilAmal

thEttam uRath thErnthum amirfthu Am enavE Eki naman
Otti vidak kAynthu vari vEthan adaiyALam aruL
seettu vara ka(a)Ndu nali kAlan aNukA nin aruL – anpu thArAy

vEttuvaraik kAynthu kuRa mAthai uRavAdi iruL
nAttavaraic chEntha kathir vEl kodu amar Adi siRai
meettu amararkku ANdavanai vAzhka nilaiyAka vaikum – vinjaiyOnE

vEtRu uruvil pOnthu mathurA puriyil Adi vaikai
AtRin maNal thAngum mazhuvALi ena thAthai puram
mEttai eriththu ANda siva lOkan vidai ERi idamum – koL Ayi

kOttu mulaith thAngum izhaiyAna idai kOdi mathi
thOtRam enap pOntha azhakAna sivakAmi viRal
kUtRuvanaik kAyntha apirAmi manathu Ara aruL – kantha vELE

kUttu nathith thEngiya ve(L)LARu tharaLARu thikazh
nAttil uRaic chEntha mayilA va(L)Li theyvAnaiyode
kUtRu vizhath thANdi enathu Akam athil vAzh kumara – thambirAnE.