திருப்புகழ் 758 கறுவி மைக்கணி (திருவரத்துறை)

Thiruppugal 758 Karuvimaikkani

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் – தனதான

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
கவிசொ லிச்சிரித் – துறவாடிக்

களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
கருதி வைத்தவைப் – பவைசேரத்

தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
தழுவி நெக்குநெக் – குயிர்சோரச்

சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
தருணி கட்ககப் – படலாமோ

பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
பிரம சிற்சுகக் – கடல்மூழ்கும்

பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
ப்ரபல கொச்சையிற் – சதுர்வேதச்

சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
சிவிகை யைக்கொடுத் – தருளீசன்

செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
திருவ ரத்துறைப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் – தனதான

கறுவி மை க(ண்) இட்டு இனிது அழைத்து இயல்
கவி சொ(ல்)லிச் சிரித்து – உறவாடி

களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன்
கருதி வைத்த வைப்பு – அவை சேர

தறு க(ண்)ணில் பறித்து இரு கழுத்து
உறத் தழுவி நெக்கு நெக்கு – உயிர் சோர

சயன மெத்தையில் செயல் இழக்கும் இத்
தருணிகட்கு அகப் – படலாமோ

பிறவியை தணித்து அருளும் நிட்களப்
பிரம சித் சுகக் – கடல் மூழ்கும்

பெரு முனித் திரள் பரவு செய்ப்பதிப்
ப்ரபல கொச்சையில் – சதுர் வேதச்

சிறுவ நிற்கு அருள் கவிகை நித்திலச்
சிவிகையைக் கொடுத்து – அருள் ஈசன்

செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த்
திருவரத் துறைப் – பெருமாளே

English

kaRuvi maikkaNit tinitha zhaiththiyaR
kaviso licchirith – thuRavAdik

kaLavu viththaiyit tuLamu rukkimuR
karuthi vaiththavaip – pavaisErath

thaRuka NiRpaRith thiruka zhuththuRath
thazhuvi nekkunek – kuyirsOra

sayana meththaiyiR ceyala zhikkumith
tharuNi katkakap – padalAmO

piRavi yaiththaNith tharuLu nitkaLap
pirama siRchukak – kadalmUzhkum

perumu niththirat paravu seyppathip
prapala kocchaiyiR – sathurvEthac

chiRuva niRkarut kavikai niththilac
chivikai yaikkoduth – tharuLeesan

sekatha laththiniR pukazhpa daiththameyth
thiruva raththuRaip – perumALE.

English Easy Version

kaRuvi mai ka(N) ittu inithu azhaiththu iyal
kavi so(l)lic chiriththu – uRavAdi

kaLavu viththai ittu uLam urukki mun
karuthi vaiththa vaippu – avai sEra

thaRu ka(N)Nil paRiththu iru kazhuththu
uRath thazhuvi nekku nekku – uyir sOra

sayana meththaiyil seyal izhakkum ith
tharuNikatku akap – padalAmO

piRaviyai thaNiththu aruLum nitkaLap
pirama sith sukak – kadal mUzhkum

peru munith thiraL paravu seyppathip
prapala kocchaiyil – sathur vEthac

chiRuva niRku aruL kavikai niththilac
chivikaiyaik koduththu – aruL eesan

seka thalaththinil pukazh padaiththa meyth
thiruvarath thuRaip – perumALE