திருப்புகழ் 759 பூத்தார் சூடு (யாழ்ப்பாணாயன்பட்டினம்)

Thiruppugal 759 Puththarsudu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன – தனதான

பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் – விடுதூதும்

போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயங் கற்றமை விழியின – ரமுதூறல்

வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத – மகிலாரம்

மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட – அருளாயோ

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி – புவநேசை

ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம துறைபவள் – பெறுசேயே

ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு – முருகோனே

ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன – தனதான

பூத் தார் சூடும் கொத்து அலர் குழலியர்
பார்த்தால் வேலும் கட்கமு(ம்) மதன் விடும்
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் – விடு தூதும்

போல் தாவி நாளும் கைப் பொருள் உடையவர்
மேல் தாளார் தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் – அமுது ஊறல்

வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர்
நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் – அகில் ஆரம்

மாப் பூண் ஆரம் கச்சு அணி முலையினர்
வேட்(கை) பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய்
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட – அருளாயோ

ஆத்தாள் மால் தங்கைச்சி க(ன்)னிகை உமை
கூத்தாடு ஆநந்த சிவை திரி புரை
ஆள் பேய் பூதம் சுற்றிய பயிரவி – புவ நேசை

ஆக்கா யாவும் பற்றியெ திரிபு உற
நோக்கா ஏதும் செற்றவள் திரு
விளையாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் – பெறு சேயே

ஏத்தா நாளும் தர்ப்பண செபமோடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு – முருகோனே

ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள்
யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய – பெருமாளே

English

pUththAr cUdung koththalar kuzhaliyar
pArththAl vElung katkamu mathanvidu
pOrkkAr needung katchara modunaman – viduthUthum

pOtRAy nALung kaipporu Ludaiyavar
mEtRA LArtham patRidu pramaiyathu
pUttA mAyang katRamai vizhiyina – ramuthURal

vAyththAr pEthanj cheppupoy virakiyar
nUtREy nUlin sitRidai yidarpada
vAttAy veesung karppura mrukamatha – makilAram

mAppU NArang kacchaNi mulaiyinar
vEtpU NAkang kettenai yunathumey
vAkkAl njAnam petRini vazhipada – aruLAyO

AththAL mAlthang kaicchika nikaiyumai
kUththA dAnan thacchivai thiripurai
yAtpEy pUthanj chutRiya payiravi – puvanEsai

AkkA yAvum patRiye thiripuRa
nOkkA Ethunj chetRavaL thiruviLai
yAttA leesan pakkama thuRaipavaL – peRusEyE

EththA nALun tharppaNa sepamodu
neeththAr njAnam patRiya gurupara
yAppA rAyunj chotRami zharuLtharu – murukOnE

ERpOr thAmvan thicchaiyin makizhvodu
vAyppAy veesum poRprapai nedumathiL
yAzhppA NAyan pattina maruviya – perumALE.

English Easy Version

pUth thAr cUdum koththu alar kuzhaliyar
pArththAl vElum katkamu(m) mathan vidum
pOrkku Ar needum kaN saramodu naman – vidu thUthum

pOl thAvi nALum kaip poruL udaiyavar
mEl thALAr tham patRidu pramaiyathu
pUttA mAyam katRa mai vizhiyinar – amuthu URal

vAyththAr pEtham seppu poy virakiyar
nUl thEy nUlin sitRidai idarpada
vAL thAy veesum karppura mrukamatham – akil Aram

mAp pUN Aram kacchu aNi mulaiyinar
vEt(kai) pUNu Akam kettu enai unathu mey
vAkkAl njAnam petRu ini vazhipada – aruLAyO

AththAL mAl thangkaicchi ka(n)nikai umai
kUththAdu Anantha sivai thiri purai
AL pEy pUtham sutRiya payiravi – puva nEsai

AkkA yAvum patRiye thiripu uRa
nOkkA Ethum setRavaL thiru
viLaiyAttAl eesan pakkam athu uRaipavaL – peRu sEyE

EththA nALum tharppaNa sepamOdu
neeththAr njAnam patRiya gurupara
yAppu ArAyum sol thamizh tharu – murukOnE

ERpOr thAm vanthu icchaiyin makizhvodu
vAyppAy veesum pon prapai nedu mathiL
yAzhppANAyan pattinam maruviya – perumALE.