Thiruppugal 762 Mulamundaganubudhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன – தந்ததான
மூல முண்டகனு பூதி மந்திரப
ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
தார சந்திமுக மாறு மிந்த்ரதரு – வுந்தளாமேல்
மூது ரம்பலவர் பீட மந்தமுமி
லாத பந்தவொளி யாயி ரங்கிரண
மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக – விந்துநாதம்
ஓல மென்றுபல தாள சந்தமிடு
சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி – ரங்கிசூலம்
ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி – சந்தியாதோ
சூலி யந்தரிக பாலி சங்கரிபு
ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
வாமி பங்கிசிவ காம சுந்தரியு – கந்தசேயே
சூர சங்கரகு மார இந்திரச
காய அன்பருப கார சுந்தரகு
காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட – னங்கொள்வேலா
சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக – கந்தவேளே
தேவ ரம்பையமு தீண மங்கைதரு
மான ணைந்தபுய தீர சங்கரதி
யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன – தந்ததான
மூல முண்டகம் அனுபூதி மந்திர
பராபரம் சுடர்கள் மூணு மண்டல
(ஆ)தார சந்தி முகம் ஆறும் இந்த்ர தருவும் – தளாமேல்
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும்
இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக – விந்து நாதம்
ஓலம் என்று பல தாள சந்தம் இடு
சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு
ஈர் ஏழு கண்டு விளையாடி இந்து கதிர் – அங்கி சூலம்
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு
தூணில் தங்க வரி ஞான வண் கயிறு
மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி – சந்தியாதோ
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி
அம்பரி குமாரி எண் குண
சுவாமி பங்கி சிவகாமி சுந்தரி – உகந்த சேயே
சூர சங்கர குமார இந்திர
சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் – கொள் வேலா
சீல வெண் பொடி இடாத வெம் சமணர்
மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி
நீறு இடும் கமல பாணி சந்திர முக – கந்த வேளே
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு
மான் அணைந்த புய தீர சங்கர
தியாகர் வந்து உறை ந(ல்)லூர் அமர்ந்து வளர் – தம்பிரானே.
English
mUla muNdakanu pUthi manthirapa
rApa ranjudarkaL mUNu maNdalaa
thAra santhimuka mARu minthratharu vunthaLAmEl
mUthu rampalavar peeta manthamumi
lAtha panthavoLi yAyi rangiraNa
mUNu minthuvoLir sOthi viNpadika vinthunAtham
Ola menRupala thALa santhamidu
sEvai kaNdamuthai vAri yuNdulaki
rEzhu kaNduviLai yAdi yinthukathi rangicUlam
Odu manthakali kAlo dunganadu
thUNil thangavari njAna vaNkayiRu
meetha Nainthusatha kOdi chanthravoLi santhiyAthO
cUli yantharika pAli sangaripu
rAri yampariku mAri yeNkuNasu
vAmi pangisiva kAma sunthariyu kanthasEyE
cUra sangaraku mAra inthirasa
kAya anparupa kAra suntharaku
kAe numcuruthi yOla monRanada namkoLvElA
seela veNpodiyi dAtha venjamaNar
mALa vengazhuvi lERu menRupodi
neeRi dungamala pANi santhramuka kanthavELE
thEva rampaiyamu theeNa mangaitharu
mAna Nainthapuya theera sangarathi
yAkar vanthuRaina lUra marnthuvaLar thambirAnE.
English Easy Version
mUla muNdakam anupUthi manthira
parAparam chudarkaL mUNu maNdala
(A)thAra santhi mukam ARum inthra tharuvum – thaLAmEl
mUthura ampalavar peedam anthamum
ilAtha pantha oLi Ayiram kiraNa
mUNum inthu oLir sOthi viN padika – vinthu nAtham
Olam enRu pala thALa santham idu
sEvai kaNdu amuthai vAri uNdu ulaku
eer Ezhu kaNdu viLaiyAdi inthu kathir – angi cUlam
Odum antha kalikAl odunga nadu
thUNil thanga vari njAna vaN kayiRu
meethu aNainthu satha kOdi chanthira oLi – santhiyAthO
cUli anthari kapAli sangari
purAri ampari kumAri eN kuNa
suvAmi pangi sivakAmi sunthari – ukantha sEyE
cUra sangara kumAra inthira sakAya
anpar upakAri sunthara kukA
enum suruthi Olam onRa nadanam – koL vElA
seela veN podi idAtha vem samaNar
mALa vem kazhuvil ERum enRu podi
neeRu idum kamala pANi chanthira muka – kantha vELE
thEva rampai amuthu eeNa mangai tharu
mAn aNaintha puya theera sangara thiyAkar
vanthu uRai na(l)lUr amarnthu vaLar – thambirAnE.