Thiruppugal 763 Vanduaniyum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன – தனதான
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை – குயில்போல
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை – மடவார்பொன்
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் – சதிகாரர்
கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு – முழல்வேனோ
அண்டரு டன்தவ சேந்து மாதவர்
புண்டரி கன்திரு பாங்கர் கோவென
அஞ்சலெ னும்படி போந்து வீரமொ – டசுராரை
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
அந்தக னுங்கயி றாங்கை வீசிட – விடும்வேலா
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
யென்பணி யன்கன சாம்பல் பூசிய
செஞ்சட லன்சுத சேந்த வேலவ – முருகோனே
திங்கள்மு கந்தன சாந்து மார்பின
ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன – தனதான
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி
அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல்
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை – குயில் போல
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின்
பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர(ம்)
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை – மடவார் பொன்
கண்டவுடன் களி கூர்ந்து பேசிகள்
குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள்
கண் சுழலும் படி தாண்டி ஆடிகள் – சதிகாரர்
கஞ்சுளியும் தடி ஈந்து போ என
நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள்
கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் – உழல்வேனோ
அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர்
புண்டரிகன் திரு பாங்கர் கோ என
அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு – அசுராரை
அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள்
எண்கிரியும் பொடி சாம்பர் நூறிட
அந்தகனும் கயிறு ஆங்கு ஐ வீசிட – விடும்வேலா
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி
என்பு அணியன் கன சாம்பல் பூசிய
செம் சடலன் சுத சேந்த வேலவ – முருகோனே
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள்
என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு
சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய – பெருமாளே
English
vaNdaNi yumkamazh kUntha lArvizhi
ampiya lunjcilai pOntha vANuthal
vaNdara Lanthika zhAyntha vArnakai – kuyilpOla
vaNpayi lumkuva dANda mArmulai
yinpoRi yangumi zhAmpal thOLkara
vanjiye numkodi sErntha nUlidai – madavArpon
kaNdavu dankaLi kUrnthu pEsikaL
kuNduNi yumkural sAnga mOthikaL
kaNsuzha lumpadi thANdi yAdikaL – sathikArar
kanjuLi yunthadi yeenthu pOvena
nanjaiyi dumkava dArntha pAvikaL
kampaiyi lumchada mAynthu nAyanu – muzhalvEnO
aNdaru danthava sEnthu mAdhavar
puNdari kanthiru pAngar kOvena
anjale numpadi pOnthu veeramo – dasurArai
angamo dungida mANdo dAzhika
LeNkiri yumpodi sAmpar nURida
anthaka numkayi RAngai veesida – vidumvElA
seNdaNi yumcadai pAnthaL neermathi
yenpaNi yankana sAmpal pUsiya
senjada lansutha sEntha vElava – murukOnE
thingaLmu kanthana sAnthu mArpina
LenRanu Lampuku pAngi mAnodu
sinthaima kizhnthuma yEnthra mEviya – perumALE.
English Easy Version
vaNdu aNiyum kamazh kUnthalAr vizhi
ampu iyalum silai pOntha vAL nuthal
vaN tharaLam thikazh Ayntha vAr nakai – kuyil pOla
vaN payilum kuvadu ANda mAr mulaiyin
poRi am kumizh Ampal thOL kara(m)
vanji enum kodi sErntha nUl idai – madavAr pon
kaNdavudan kaLi kUrnthu pEsikaL
kuNduNiyum kural sAngam OthikaL
kaN suzhalum padi thANdi AdikaL – sathikArar
kanjuLiyum thadi eenthu pO ena
nanjai idum kavadu Arntha pAvikaL
kampaiyilum sadam mAynthu nAyanum – uzhalvEnO
aNdar udan thavasu Enthu mAdhavar
puNdarikan thiru pAngar kO ena
anjal enumpadi pOnthu veeramodu – asurArai
angam odungida mANdu oda
AzhikaL eNkiriyum podi sAmpar nURida
anthakanum kayiRu Angu ai veesida – vidumvElA
seNdu aNiyum sadai pAnthaL neer mathi
enpu aNiyan kana sAmpal pUsiya
sem sadalan sutha sEntha vElava – murukOnE
thingaL mukam thanam sAnthu mArpinaL
enRan uLLam puku pAngi mAnOdu
sinthai makizhnthu mayEnthiram mEviya – perumALE