திருப்புகழ் 764 அலைகடல் சிலை (சீகாழி)

Thiruppugal 764 Alaikadalsilai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன – தந்ததான

அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
அரிவையர் வசையுட னங்கி போல்வர
அசைவன விடைமணி யன்றில் கோகிலம் – அஞ்சிநானும்

அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
அணிபணி மணிபல வெந்து நீறெழ – அங்கம்வேறாய்

முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
வழிவச மறஅற நின்று சோர்வுற
முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட – மங்கிடாதே

முருகவிழ் திரள்புய முந்து வேலணி
முளரியொ டழகிய தொங்கல் தாரினை
முனிவற நினதருள் தந்தென் மாலைமு – னிந்திடாதோ

சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் – சிங்கமேறி

திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட
சிவனுட னடம்வரு மங்கை மாதுமை – தந்தவேளே

மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மலரடி வருடியெ நின்று நாடொறு
மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி – தொண்டினோனே

மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன – தந்ததான

அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும்
அரிவையர் வசையுடன் அங்கி போல் வர
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் – அஞ்சி நானும்

அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற
அணி பணி மணி பல வெந்து நீறு எழ – அங்கம் வேறாய்

முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு
அழி வசம் அற அற நின்று சோர்வு உற
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட – மங்கிடாதே

முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி
முளரியொடு அழகிய தொங்கல் தாரினை
முனிவு அற நினது அருள் தந்து என் மாலை – முனிந்திடாதோ

சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி
திரி புரை பயிரவி திங்கள் சூடிய
திகழ் சடை நெடியவள் செம்பொன் மேனியள் – சிங்கம் ஏறி

திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொடு அறை பறை நின்று மோதிட
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை – தந்த வேளே

மலை தனில் ஒரு முநி தந்த மாது தன்
மலர் அடி வருடியெ நின்று நாள் தொறும்
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி – தொண்டினோனே

மழை முகில் தவழ் தரும் மண்டு கோபுர
மதிள் வயல் புடை உற விஞ்சு காழியில்
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் – தம்பிரானே.

English

alaikadal silaimathan anthi yUthaiyum
arivaiyar vasaiyuda nangi pOlvara
asaivana vidaimaNi yanRil kOkilam – anjinAnum

azhalidu mezhukena vempi vErvezha
akilodu mrukamatha nanju pOluRa
aNipaNi maNipala venthu neeRezha – angamvERAy

mulaikanal sorivara munpu pOlninai
vazhivasa maRARa ninRu sOrvuRa
muzhuthukoL virakanal moNdu veesida – mangidAthE

murukavizh thiraLpuya munthu vElaNi
muLariyo dazhakiya thongal thArinai
munivaRa ninatharuL thanthen mAlaimu – ninthidAthO

silainuthal kayalvizhi senjol vAnavi
thiripurai payiravi thingaL cUdiya
thikazhsadai nediyavaL sempon mEniyaL – singamERi

thiraLpadai yalakaikaL pongu kOdukaL
thimilaiyo daRaipaRai ninRu mOthida
sivanuda nadamvaru mangai mAthumai – thanthavELE

malaithani lorumuni thantha mAthuthan
malaradi varudiye ninRu nAdoRu
mayilpayil kuyilkiLi vampi lEkadi – thoNdinOnE

mazhaimukil thavazhtharu maNdu kOpura
mathiLvayal pudaiyuRa vinju kAzhiyil
varumoru kavuNiyar maintha thEvarkaL – thambirAnE.

English Easy Version

alai kadal silai mathan anthi Uthaiyum
arivaiyar vasaiyudan angi pOl vara
asaivana vidai maNi anRil kOkilam – anji nAnum

azhal idu mezhuku ena vempi vErvu ezha
akilodu mrukamatha nanju pOl uRa
aNi paNi maNi pala venthu neeRu ezha – angam vERAy

mulai kanal sori vara munpu pOl ninaivu
azhi vasam aRa aRa ninRu sOrvu uRa
muzhuthu koL viraku anal moNdu veesida – mangidAthE

muruku avizh thiraL puyam unthu vEl aNi
muLariyodu azhakiya thongal thArinai
munivu aRa ninathu aruL thanthu en mAlai – muninthidAthO

silai nuthal kayal vizhi sem sol vAnavi
thiri purai payiravi thingaL cUdiya
thikazh sadai nediyavaL sempon mEniyaL – singam ERi

thiraL padai alakaikaL pongu kOdukaL
thimilaiyodu aRai paRai ninRu mOthida
sivanudan nadam varu mangai mAthu umai – thantha vELE

malai thanil oru muni thantha mAthu than
malar adi varudiye ninRu nAL thoRum
mayil payil kuyil kiLi vampilE kadi – thoNdinOnE

mazhai mukil thavazh tharum maNdu kOpura
mathiL vayal pudai uRa vinju kAzhiyil
varum oru kavuNiyar maintha thEvarkaL – thambirAnE