திருப்புகழ் 765 இரதமான தேன் (சீகாழி)

Thiruppugal 765 Iradhamanathen

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

இரத மான தேனூற லதர மான மாமாத
ரெதிரி லாத பூணார – முலைமீதே

இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
விழியி னாலு மாலாகி – யநுராக

விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
ம்ருகம தாதி சேரோதி – நிழல்மூழ்கி

விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
விழல னாய்வி டாதேநி – னருள்தாராய்

அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
அடிகள் பூசி யாமூடர் – கரையேற

அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
அறம்வி சாரி யாமூடர் – நரகேழிற்

புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார – முருகோனே

புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
புகலி மேவி வாழ்தேவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர்
எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே

இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால
விழியினாலும் மால் ஆகி – அநுராக

விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாடோறும்
ம்ருகமத ஆதிசேர் ஓதி – நிழல் மூழ்கி

விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும்
விழலனாய் விடாதே நின் – அருள் தாராய்

அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர்
அடிகள் பூசியா மூடர் – கரை ஏற

அறிவு நூல் க(ல்)லா மூடர் நெறியிலே நி(ல்)லா மூடர்
அறம் விசாரியா மூடர் – நரகு ஏழில்

புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி
புரணம் பூரணாகார – முருகோனே

புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு
புகலி மேவி வாழ் தேவர் – பெருமாளே

English

iratha mAna thEnURa lathara mAna mAmAtha
rethiri lAtha pUNAra – mulaimeethE

inithu pOdu mEkAsa udaiyi nAlu mAlAla
vizhiyi nAlu mAlAki – yanurAka

viraka mAki yEpAya lidaivi dAmal nAdORu
mrukama thAthi sErOthi – nizhalmUzhki

viLaiyu mOka mAmAyai kazhalu mARu nAyEnum
vizhala nAyvi dAthEni – naruLthArAy

araka rAe nAmUdar thiruve NeeRi dAmUdar
adikaL pUsi yAmUdar – karaiyERa

aRivu nUlka lAmUdar neRiyi lEni lAmUdar
aRamvi sAri yAmUdar – narakEzhiR

puraLa veezhva reerARu karavi nOtha sEyjOthi
puraNa pUra NAkAra – murukOnE

puyalu lAvu sENAdu paravi nALu meedERu
pukali mEvi vAzhthEvar – perumALE.

English Easy Version

irathamAna thEn URal atharamAna mA mAthar
ethir ilAtha pUN Aram – mulai meethE

inithu pOdum EkAsam udaiyinAlum AlAla
vizhiyinAlum mAl Aki – anurAka

virakam AkiyE pAyal idaividAmal nAdORum
mrukamatha AthisEr Othi – nizhal mUzhki

viLaiyum mOka mA mAyai kazhalumARu nAyEnum
vizhalanAy vidAthE nin – aruL thArAy

arakarA enA mUdar thiru veN neeRu idA mUdar
adikaL pUsiyA mUdar – karai ERa

aRivu nUl ka(l)lA mUdar neRiyilE ni(l)lA mUdar
aRam visAriyA mUdar – naraku Ezhil

puraLa veezhvar eerARu kara vinOtha sEy jOthi
puraNam pUraNAkAra – murukOnE

puyal ulAvu sENAdu paravi nALum eedERu
pukali mEvi vAzh thEvar – perumALE.