திருப்புகழ் 766 ஊனத்தசை தோல்கள் (சீகாழி)

Thiruppugal 766 Unaththasaitholgal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
தானத்தன தான தனந்த – தனதான

ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை – மறைநாலும்

ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஓடித்தடு மாறி யுழன்று – தளர்வாகிக்

கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து – புவிமீதே

கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
கோலக்கழ லேபெற இன்று – அருள்வாயே

சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் – மிசையேறத்

தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீர வுவந்த – குருநாதா

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
காதற்கிளி யோடு மொழிந்து – சிலைவேடர்

காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
காழிப்பதி மேவி யுகந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
தானத்தன தான தனந்த – தனதான

ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி மாயம் மிகுந்த
ஊசல் சுடும் நாறும் குரம்பை – மறை நாலும்

ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் எழுந்து
ஓடித் தடுமாறி உழன்று – தளர்வாகி

கூனித் தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச் சடம் ஈதை உகந்து – புவி மீதே

கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று
கோலக் கழலே பெற இன்று – அருள்வாயே

சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண் – மிசை ஏற

தீரத் திரு நீறு புரிந்து மீனக் கொடியோன் உடல் துன்று
தீமைப் பிணி தீர உவந்த – குருநாதா

கானச் சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து
காதல் கிளியோடு மொழிந்து – சிலை வேடர்

காணக் கணியாக வளர்ந்து ஞானக் குற மானை மணந்து
காழிப் பதி மேவி உகந்த – பெருமாளே

English

Unath thasai thOlgaL sumandha kAyappOdhi mAya migundha
UsaR sudu nARu kurambai – maRai nAlum

Odhappadu nAlu mukandra nAl utridu kOlam ezhundhu
Odith thadumARi uzhandru – thaLarvAgi

kUnith thadiyOdu nadandhu eenappadu kOzhai migundha
kULach chadameedhai ugandhu – buvimeedhE

kUsap piramANa prapancha mAyak kodu nOygaL agandru
kOlak kazhalE peRa indru – aruL vAyE

sEnak guru kUdalil andru nyAnath thamizh nUlgaLpagarndhu
sEnaich samaNOr kazhuvin kaN – misai ERa

dheerath thiru neeRu purindhu meenak kodiyOn udal thundru
theemaip piNi theera uvandha – gurunAthA

kAnach chiRumAnai ninaindhu EnaRpuna meedhu nadandhu
kAdhaR kiLiyOdu mozhindhu – silai vEdar

kANak kaNiyAga vaLarndhu nyAna kuRamAnai maNandhu
kAzhip padhimEvi ugandha – perumALE.

English Easy Version