திருப்புகழ் 767 ஒய்யா ரச்சிலை (சீகாழி)

Thiruppugal 767 Oiyarachchilai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன – தனதான

ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
மெய்யா ரப்பணி பூஷண மாலைக
ளுய்யா நற்கலை யேகொடு மாமத – விதமாகி

ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
கையா ரக்கணை மோதிர மேய்பல
வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு – முடல்பேணிச்

செய்வா ரிப்படி யேபல வாணிப
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
செய்யார் சற்பனை காரர்பி சாசரு – னடிபேணாச்

செய்வா ரிற்படு நானொரு பாதகன்
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
செய்யா யற்புத மேபெற வோர்பொரு – ளருள்வாயே

மையா ரக்கிரி யேபொடி யாய்விட
பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
வையாய் பொற்சர ணாஎன வேதொழ – விடும்வேலா

வையா ளிப்பரி வாகன மாகொளு
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
மைபோ லக்கதி ரேய்நிற மாகிய – மயில்வாழ்வே

தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
தெய்வீ கப்பர மாகுரு வேயென – விருதூதத்

திய்யா ரக்கழு வேறிட நீறிடு
கையா அற்புத னேபிர மாபுர
செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன – தனதான

ஒய்யாரச் சிலையாம் என வாசனை
மெய் ஆரப் பணி பூஷண மாலைகள்
உய்யா நற் கலையே கொடு மா மத – இதமாகி

ஒவ்வார் இப்படியோர் எனவே இரு
கை ஆரக் கணை மோதிரம் ஏய் பல
உள்ளார் செப்பிட ஏம் உற நாளிலும் – உடல்பேணிச்

செய்வார் இப்படியே பல வாணிபம்
இய்யார் இல் பணமே ஒரு காசு இடை
செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உ(ன்)னடி – பேணாச்

செய்வாரில் படு நான் ஒரு பாதகன்
மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது
செய்யா அற்புதமே பெற ஓர் பொருள் – அருள்வாயே

மை ஆர் அக் கிரியே பொடியாய் விட
பொய் சூர் அப்பதியே கெட வானவர்
வையாய் பொன் சரணா எனவே தொழ – விடும் வேலா

வையாளிப் பரி வாகன மா கொளு
துவ்வு ஆழிக் கடல் ஏழ் மலை தூளி செய்
மை போலக் கதிர் ஏய் நிறமாகிய – மயில் வாழ்வே

தெய்வ யானைக்கு அரசே குற மான் மகிழ்
செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ்
தெய்வீகப் பரமா குருவே என – விருது ஊத

திய்யார் அக் கழு ஏறிட நீறு இடு
கையா அற்புதனே மா புர
செய் காழிப் பதி வாழ் முருகா சுரர் – பெருமாளே

English

oyyA racchilai yAmena vAsanai
meyyA rappaNi pUshaNa mAlaika
LuyyA naRkalai yEkodu mAmatha – vithamAki

ovvA rippadi yOrena vEyiru
kaiyA rakkaNai mOthira mEypala
vuLLAr seppida EmuRa nALilu – mudalpENic

cheyvA rippadi yEpala vANipa
miyyA riRpaNa mEyoru kAsidai
seyyAr saRpanai kArarpi sAsaru – nadipENAc

cheyvA riRpadu nAnoru pAthakan
meyyA eppadi yOrkarai sErvathu
seyyA yaRputha mEpeRa vOrporu – LaruLvAyE

maiyA rakkiri yEpodi yAyvida
poycU rappathi yEkeda vAnavar
vaiyAy poRchara NAena vEthozha – vidumvElA

vaiyA Lippari vAkana mAkoLu
thuvvA zhikkada lEzhmalai thULisey
maipO lakkathi rEyniRa mAkiya – mayilvAzhvE

theyvA naikkara sEkuRa mAnmakizh
seyyA muththami zhAkara nEpukazh
theyvee kappara mAguru vEyena – viruthUthath

thiyyA rakkazhu vERida neeRidu
kaiyA aRputha nEpira mApura
seykA zhippathi vAzhmuru kAsurar – perumALE.

English Easy Version

oyyArac chilaiyAm ena vAsanai
mey Arap paNi pUshaNa mAlaikaL
uyyA naR kalaiyE kodu mA matha – ithamAki

ovvAr ippadiyOr enavE iru
kai Arak kaNai mOthiram Ey pala
uLLAr seppida Em uRa nALilum – udalpENic

cheyvAr ippadiyE pala vANipam
iyyAr il paNamE oru kAsu idai
seyyAr saRpanaikArar pisAsar u(n)nadi – pENAc

cheyvAril padu nAn oru pAthakan
meyyA eppadi Or karai sErvathu
seyyA aRputhamE peRa Or poruL – aruLvAyE

mai Ar ak kiriyE podiyAy vida
poy cUr appathiyE keda vAnavar
vaiyAy pon charaNA enavE thozha – vidum vElA

vaiyALip pari vAkana mA koLu
thuvvu Azhik kadal Ezh malai thULi sey
mai pOlak kathir Ey niRamAkiya – mayil vAzhvE

theyva yAnaikku arasE kuRa mAn makizh
seyyA muththamizh AkaranE pukazh
theyveekap paramA guruvE ena – viruthu Utha

thiyyAr ak kazhu ERida neeRu idu
kaiyA aRputhanE mA pura
sey kAzhip pathi vAzh murukA surar – perumALE