திருப்புகழ் 768 கட்காமக்ரோத (சீகாழி)

Thiruppugal 768 Katkamakrotha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

கட்கா மக்ரோ தத்தே கட்சீ
மிழ்த்தோர் கட்குக் – கவிபாடிக்

கச்சா பிச்சா கத்தா வித்தா
ரத்தே யக்கொட் – களைநீளக்

கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே
யிட்டா சைப்பட் – டிடவேவை

கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
னித்தீ தத்தைக் – களைவாயே

வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
விக்கா னத்தைத் – தரிமாறன்

வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
புக்காய் வெற்பிற் – குறமானை

முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
முற்சார் செச்சைப் – புயவீரா

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

கள் காம க்ரோதத்தே கண்
சீமிழ்த்தோர்கட்குக் – கவி பாடி

கச்சா பிச்சாகத் தாவித்து
ஆரத்தே அக் கொட் – களை நீளக்

கொள்கால் அக்கோலக் கோணத்தே
இட்டு ஆசைப் பட்டிடவே – வை

கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன்
இத்தீது அத்தைக் – களைவாயே

வெட்காமல் பாய் சுற்று ஊமர்ச் சேர்
விக்கானத்தைத் – தரி மாறன்

வெப்பு ஆறப் பாடிக் காழிக்கே
புக்காய் வெற்பில் – குறமானை

முள் கானில் கால் வைத்து ஓடிப் போய்
முற்சார் செச்சைப் – புய வீரா

முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே

English

katkA makrO thaththE katchee
mizhththOaf katkuk – kavipAdik

kacchA picchA kaththA viththA
raththE yakkot – kaLaineeLak

kotkA lakkO lakkO NaththE
yittA saippat – tidavEvai

kottA nakkU nukkA eyththE
niththee thaththaik – kaLaivAyE

vetkA maRpAy sutRU marcchEr
vikkA naththaith – tharimARan

veppA RappA dikkA zhikkE
pukkAy veRpiR – kuRamAnai

mutkA niRkAl vaiththO dippOy
muRchAr secchaip – puyaveerA

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

kaL kAma krOthaththE kaN
seemizhththOrkatkuk – kavi pAdi

kacchA picchAkath thAviththu
AraththE ak kotkaLai – neeLak

koLkAl akkOlak kONaththE
ittu Asaip pattidavE – vai

koL thAnakku UnukkA eyththEn
iththeethu aththaik – kaLaivAyE

vetkAmal pAy sutRu Umars sEr
vikkAnaththaith – thari mARan

veppu ARap pAdik kAzhikkE
pukkAy veRpil – kuRamAnai muL

kAnil kAl vaiththu Odip pOy
muRsAr secchaip – puya veerA

muththA muththee aththA suththA
muththA muththi – perumALE