திருப்புகழ் 770 சந்தனம் பரிமள (சீகாழி)

Thiruppugal 770 Sandhanamparimala

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன – தனதான

சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர் அனமென வருநடை – மடமாதர்

சந்த தம்பொலி வழகுள வடிவினர்
வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர – அவர்மீதே

சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு – முனிவாகித்

திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி – னருள்கூர்வாய்

மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் – மருகோனே

மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி – மணவாளா

தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
தங்கு சண்பக முகிலள வுயர்தரு – பொழில்மீதே

சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
சண்பை யம்பதி மருவிய அமரர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன – தனதான

சந்தனம் பரிமள புழுகொடு புனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
தங்கு செம் கையர் அ(ன்)னம் என வரு நடை – மடமாதர்

சந்ததம் பொலி அழகுள வடிவினர்
வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர்
தங்கள் நெஞ்சக(ம்) மகிழ்வுற நிதி தர – அவர் மீதே

சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர்
செம் பொன் இங்கு இனி இலை எனில் மிகுதியும் – முனிவாகி

திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன்
என்று சண்டைகள் புரி தரு மயலியர்
சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் – அருள் கூர்வாய்

மந்தரம் குடை என நிரை உறு துயர்
சிந்த அன்று அடர் மழை தனில் உதவிய
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் – மருகோனே

மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ
துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல்
வஞ்சி தண் குற மகள் பத மலர் பணி – மணவாளா

தந்த னந்தன தனதன தன என
வண்டு விண்டு இசை முரல் தரு மண மலர்
தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு – பொழில் மீதே

சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு
துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் – பெருமாளே.

English

santha nampari maLapuzhu kodupunai
kongai vanjiyar sariyodu koduvaLai
thangu sengaiyar anamena varunadai – madamAthar

santha thampoli vazhakuLa vadivinar
vanja kampothi manathina raNukinar
thangaL nenjaka makizhvuRa nithithara – avarmeethE

sinthai vanjaka nayamodu poruLkavar
thanthra manthrikaL tharaNiyi laNaipavar
sempo ningini yilaiyenil mikuthiyu – munivAkith

thinga LonRinil nenalporu Luthavila
nenRu saNdaikaL puritharu mayaliyar
singi yungodu midimaiyu makalani – naruLkUrvAy

mantha ramkudai yenanirai yuRuthuyar
sintha anRadar mazhaithani luthaviya
manje numpadi vadivuRu maripukazh – marukOnE

mangai yampikai makizhsara vaNapava
thunga vengaya mukanmakizh thuNaivanal
vanji thaNkuRa makaLpatha malarpaNi – maNavALA

thantha nanthana thanathana thanavena
vaNdu viNdisai muraltharu maNamalar
thangu saNpaka mukilaLa vuyartharu – pozhilmeethE

sangu nankumizh tharaLamu mezhilpeRu
thunga voNpaNi maNikaLum veyilvidu
saNpai yampathi maruviya amararkaL – perumALE.

English Easy Version

santhanam parimaLa puzhukodu punai
kongai vanjiyar sariyodu koduvaLai
thangu sem kaiyar a(n)nam ena varu nadai – madamAthar

santhatham poli azhakuLa vadivinar
vanjakam pothi manathinar aNukinar
thangaL nenjaka(m) makizhvuRa nithi thara – avar meethE

sinthai vanjaka nayamodu poruL kavar
thanthra manthrikaL tharaNiyil aNaipavar
sem pon ingu ini ilai enil mikuthiyum – munivAki

thingaL onRinil nenal poruL uthavilan
enRu saNdaikaL puri tharu mayaliyar
singiyum kodu midimaiyum akala nin – aruL kUrvAy

mantharam kudai ena nirai uRu thuyar
sintha anRu adar mazhai thanil uthaviya
manju enumpadi vadivuRum ari pukazh – marukOnE

mangai ampikai makizh saravaNapava
thunga vem kayamukan makizh thuNaiva
nal vanji thaN kuRa makaL patha malar paNi – maNavALA

thantha nanthana thanathana thana ena
vaNdu viNdu isai mural tharu maNa malar
thangu saNpaka mukil aLavu uyar tharu – pozhil meethE

sangu nal kumizh tharaLamum ezhil peRu
thunga oN paNi maNikaLum veyil vidu
saNpai am pathi maruviya amararkaL – perumALE