திருப்புகழ் 772 சிந்து உற்று எழு (சீகாழி)

Thiruppugal 772 Sindhuutruezhu\

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தத்தன தானன தந்தத் – தனதான

சிந்துற்றெழு மாமதி அங்கித் – திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற் – றெழலாலே

அந்திப்பொழு தாகிய கங்குற் – றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் – தனியானாள்

நந்துற்றிடு வாரியை மங்கத் – திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் – பொருவேளே

சந்தக்கவி நூலினர் தஞ்சொற் – கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தத்தன தானன தந்தத் – தனதான

சிந்து உற்று எழு மா மதி அங்கித் – திரளாலே
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று – எழலாலே

அந்திப் பொழுதாகிய கங்குல் – திரளாலே
அன்புற்று எழு பேதை மயங்கித் – தனி ஆனாள்

நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே
நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் – பொரு வேளே

சந்தக் கவி நூலினர் தம் சொற்கு – இனியோனே
சண்பைப் பதி மேவிய கந்தப் – பெருமாளே

English

sinthutRezhu mAmathi angith – thiraLAlE
thenRatRaru vAsami kunthut – RezhalAlE

anthippozhu thAkiya kangut – RiraLAlE
anputRezhu pEthaima yangith – thaniyAnAL

nanthutRidu vAriyai mangath – thikazhAyE
nanjoththoLir vElinai yunthip – poruvELE

santhakkavi nUlinar thanjcoR – kiniyOnE
saNpaippathi mEviya kanthap – perumALE.

English Easy Version

sinthu utRu ezhu mA mathi angith – thiraLAlE
thenRal tharu vAsam mikunthu utRu – ezhalAlE

anthip pozhuthAkiya kangul – thiraLAlE
anputRu ezhu pEthai mayangith – thani AnAL

nanthu utRidu vAriyai mangath – thikazhAyE
nanju oththu oLir vElinai unthip – poru vELE

santhak kavi nUlinar tham coRku – iniyOnE
saNpaip pathi mEviya kanthap – perumALE.